பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு அனுமதி

மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை கர்நாடக இசை கலைஞர் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட நாட்டின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ள அவர், கடந்த 56 ஆண்டுகாலமாக பாடல்களை பாடி வருகிறார். குறிப்பாக, இந்து கடவுள்களை பற்றியும், ஐயப்ப சுவாமியை பற்றியும் இவர் அதிகம் பாடியுள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள கே.ஜே.யேசுதாஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு இவர் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதேபோல,  à®®à®²à®ªà¯à®ªà¯à®°à®®à¯ மாவட்டத்தில் உள்ள கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திற்கு சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த கோயில் நிர்வாக செயற்குழு, யேசுதாசுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்க முடிவெடுத்துள்ளது.

முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பத்மநாப சுவாமி கோயிலின் நிர்வாக அதிகாரி வி ரதீசன், “யாராக இருந்தாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரலாம். இந்து மதத்தின் மீது யேசுதாஸ் கொண்டுள்ள நம்பிக்கை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே, அவர் இங்கு தரிசனம் செய்ய வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...