முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற நீதிபதிகள் அறிவுரை

முஸ்லீம் மதத்தினர்களிடையே, மூன்று முறை "தலாக்" சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதாகவும், இந்த நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுக்களை கடந்த மார்ச் 30ம் தேதியன்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. கடந்த மே 18-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் நரிமன், உதய் லலித் மற்றும் குரியன் ஆகியோர் முத்தலாக் முறைக்கு எதிராக தீர்ப்பினை தெரிவித்தனர். முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறினர். 

நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தனர். கெஹர் கூறுகையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளை முத்தலாக் மீறவில்லை என்று கூறினார். தொடர்ந்து, இஸ்லாமியருக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு 6 மாதத்திற்குள் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி 6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லை என்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகளுள் ஒருவரான குரியன் கூறுகையில், ஷரியத் சட்டத்தை மீறும் வகையில் புனித குரானின் கொள்கைகளுக்கு முத்தலாக் எதிரானது. இஸ்லாமிய நடைமுறையுடன் முத்தலாக் ஒருங்கிணைந்த ஒன்று என்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஒப்புக் கொள்வது கடினம் என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...