கர்நாடக சிறையில் சசிகலாவிற்கு சலுகை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை- சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு கர்நாடக மாநில சிறையில் சலுகை வழங்கியது குறித்தும், அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும் என சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஞானையா கடந்த சனிக்கிழமை காலமானார். வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகைக்காக உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் ஞானையா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஞானையா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டியளித்ததாவது:-

வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இருந்தவர் ஞானையா. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டவர். தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மூத்த தலைவர் ஞானையா மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

கர்நாடக மாநில சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் வழங்கியது குறித்தும் அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும்.

குடியரசுத் துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபால் கிருஷ்ண காந்தியை, நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும். சென்னையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக இந்துத்துவ அமைப்புகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சென்னை துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல்கொடுக்கும். 

சென்னையில் இருக்கும் செம்மொழி மையத்தை இடமாற்றம் செய்வது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த முயற்சியையும் மத்திய அரசு கைவிட வேண்டும். 

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...