சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை வகைப்பிரித்தலுக்கான பயிற்சி முகாம்

சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரக் கல்வித்துறை சார்பாக நோய்கள் உருவாகும் விதம், அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் முழு சுகாதார தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை வகைப்பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாநகராட்சி பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம், பகுதி-21யைச் சேர்ந்த சுமார் 500 துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் மட்கும் குப்பை வகைகளான காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்கள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள், மீதமான உணவு மற்றும் மாமிசக் கழிவுகள், தேநீர் பைகள், உதிர்ந்த இலை தழைகள், பூஜை செய்த மலர்கள், மாலைகள் போன்றவற்றை பச்சை நிறத் தொட்டியிலும், மட்காத குப்பை வகைகளான பிளாஸ்டிக் பால் கவர்கள், உணவுப் பொருட்களின் கவர்கள், காகித குப்பைகள், உலோகக் கழிவுகள், ரப்பர், தெர்மோகோல், பழைய தரை துடைப்பான்கள், தேங்காய் சிரட்டை போன்றவற்றை நீல நிறத் தொட்டியிலும் முறையாக சேகரித்து அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது.

குறிப்பாக, மழைக்காலங்களில் தேவையற்ற பொருட்களான உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், உடைந்த பொம்மைகள், உடைந்த பக்கெட்டுகள் போன்ற குப்பைகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், ஒவ்வொரு வீடுகளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பணியாளர்கள் அனைவரும் “நான் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என வகைப்பிரித்து வழங்குவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மட்கும் குப்பையை பச்சை நிற குப்பைத் தொட்டியிலும், மட்காத குப்பையை நீல நிற குப்பைத் தொட்டியிலும் வாங்குவேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர், அண்ணாநகர் மண்டலத்தைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலர்கள், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.   இப்பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  à®•ுப்பைகளை வகைப்பிரிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பேனர்களுடன் பணியாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.  à®µà®¿à®´à®¿à®ªà¯à®ªà¯à®£à®°à¯à®µà¯ துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டன.  à®®à¯‡à®²à¯à®®à¯, டெங்கு கொசு வேடமிட்ட பணியாளரால் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மண்டல அலுவலர் எம்.பரந்தாமன், சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், செயற்பொறியாளர் என்.நாட்சான், உதவி செயற்பொறியாளர்கள், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...