குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் நீதி போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில், குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி என கூறிஉள்ளார். வெங்கையா நாயுடு பேசுகையில், இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பாகிஸ்தானின் பொய்யானது நிராகரிக்கப்பட்டது, இது பாகிஸ்தானுக்கு சரியான மூக்குடைப்பு.

சர்வதேச மையத்தில் பாகிஸ்தானின் நிலையானது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சியில் உள்ளது. அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...