மலேசியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

கோலாலம்பூர்: தெற்கு மலேசியாவில் உள்ள பொது மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவின் ஜோகூர் பாரு என்ற பகுதியில் இயங்கி வரும் சுல்தானா அமீனா மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து மருத்துவமனை கட்டிடம் முழுவதும் மளமளவென பரவியது.

இந்த விபத்தில், 4 பெண்கள், இரண்டு ஆண்கள் என 6 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் போது மருத்துவமனைக்குள் சிக்கிக்கொண்ட 294 நோயாளிகளும், 193 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...