கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் தங்களுக்குத் தேவையான தகவல்களுக்கு உடனே நாடுவது கூகுள் சர்ச் இன்ஜின். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்ந்து வருகிறது. இதனிடையே பிரபல திருமண சேவை இணைய தளம் (மேட்ரிமோனி.காம்) ஒன்று வலைதளமான கூகுள் தேடு பொறியியல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விசாரணை முடிவில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதியானது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, போட்டி கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், கூகுள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...