இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்

ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெருஜியா நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் எற்பட்டது. மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 என பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ரோமில் உள்ள பழமையான கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...