சீன சுரங்க விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் பலி: 11 பேர் படுகாயம்

பெய்ஜிங்: சீனாவின் கைசூ மாகாணத்தின் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் மூச்சுத்திணறி பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

சீனாவின் கைசூ மாகாணத்தின் ஷென்பெங் கவுண்டியில் ராங்ஷெங் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் 18 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சுரங்கத்தின் அடிப்பகுதியில் திடீரென்று வெடிபொருட்கள் வெடித்து சிதறின.

இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளார்கள் வெளியேற முடியாமல் திணறினர்.தகவல் அறிந்த மீட்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதில் 11 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...