உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்!

பாங்காக்: உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை பெற்ற தாய்லாந்து மன்னன் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 88.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் நிர்வாகத்தின் தலைவராக மன்னரே இருந்து வருகிறார். இங்கு 1946ம் ஆண்டு ஜூன் 9ல் ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் மன்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர்,பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர் மீது தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மன்னரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். மன்னரின் இறப்புச் செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ல் மன்னரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குகள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடந்தது. இந்நிலையில் மன்னரின் இறப்பை அடுத்து தாய்லாந்தில் அடுத்த சில மாதம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...