முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான்!

வாஷிங்டன்: காஷ்மீர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனும் பாகிஸ்தான், முதலில் செய்ய வேண்டியது ஆக்கிரமிப்பு பகுதியை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதுதான் என்று கில்ஜித்-பல்டிஸ்தான் அமைப்பின் இயக்குநர் செங்கே செரிங் தெரிவித்துள்ளார்.

கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ஒரு திருடனைப் போல சுரண்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரிகளின் நண்பன் அல்ல என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவோருடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பிரதிநிதிகளான மஷாஹித் ஹுசேன் சையது மற்றும் ஷஸரா மன்சாப் ஆகியோர் உரையாடும் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவின் 'அட்லாண்டிக் கவுன்சில்' ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் கில்ஜித்-பால்டிஸ்தான் தேசிய காங்கிரஸ் அமைப்பின் இயக்குநர் செங்கே செரிங் கூறியதாவது:

பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் வெடிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் எந்த நாட்டுக்கும் நல்லது செய்ததில்லை. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானால் எந்த நன்மையும் இல்லை. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது.

கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியின் வளத்தை பாகிஸ்தான் ராணுவம் சுரண்டி வருகிறது. அவ்வாறு சுரண்டும் ராணுவம், ஜம்மு-காஷ்மீர் மக்களின் நண்பனாக இருக்க முடியாது.

காஷ்மீரைப் பொருத்தவரை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அது பணம் காய்ச்சி மரமாக உள்ளது. எப்போதெல்லாம் பணம் கையிருப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் கையிலெடுக்கிறது.

ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறும் பாகிஸ்தான், அந்த ஒப்பந்தத்தின் கீழ் முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறி, அந்தப் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்," என்றார் அவர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...