தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல ஹேர் டை தயாரிக்கலாம்!எப்படின்னு கேக்கறவங்க இதப் படிங்க!!

தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.

நடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம் நரைக்கு அலட்டிக் கொள்ளாமல், "தல" ஸ்டைலில், நரையே அழகு என சால்ட் அண்ட் பேப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பெண்கள் அப்படி இருக்கமுடியுமா? அவர்களுக்கு நகைகள் கூட அப்புறம்தான், தலை நரைத்து விட்டாலே, அதைப் பார்த்து பார்த்து, மனம் கலங்கி விடுவர்.

அவர்களின் மனப்பூர்வமான முயற்சிகளில் தவறில்லை, ஆயினும், இன்று கடைகளில் கிடைக்கும் தலைச்சாயங்கள் எல்லாம், இயற்கையானதுதானா? அவை எல்லாம் கலப்படம் இல்லாத கெமிக்கல்கள் மற்றும் இயற்கைச் சாயம் எனும் பெயருடன் வருவதும், பாதிப்பைத் தரக் கூடியவைகளே!

இதனால் என்ன ஆகிறது? நரை முடியை போக்க எண்ணி அதிகம் பேர், அந்த சாயங்களின் ஒவ்வாமையினால் உண்டாகும் உடல் தோல் அலர்ஜிக்கு மற்றும் முக கருமைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலையே, உண்மையாக இருக்கிறது.

நரை என் ஏற்படுகிறது?

சில காலம் முன் வரை வீடுகளில் குழந்தை பிறந்தால், ஆணாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்குத் தவறாமல் தலையில் எண்ணை தேய்ப்பார்கள். விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தினமும் தலையில் தேய்த்து வருவார்கள். அவை குழந்தைகள் உடலுக்கும் தலை முடிகளுக்கும் நன்மை செய்து, முடிகளை நன்கு வளரச் செய்யும். மேலும், நரை என்பதே மிக அரிதாக அவர்களின் ஐம்பது வயதுகளின் இறுதியில் மட்டுமே, காணப்படும்.  மேலும் படிக்க ...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...