புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் 'மிராக்கில்' திட்டம் துவக்கம்!

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து 'மிராக்கில்' எனும் மருத்துவ திட்டத்தை துவங்கியுள்ளது.



கோவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவிட கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் 'மிராக்கில்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உதவிட 'மிராக்கில்' எனும் மருத்துவ திட்டத்தை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து முன்னெடுத்துள்ளன. 

இந்த திட்டத்தின் கீழ், புற்றுநோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை ரோட்டரி அமைப்பும், இதற்கு தேவையான மருத்துவ சேவைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமும் ஏற்கும்.



இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட இந்த திட்டத்தின் துவக்கவிழா இன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. இதில்., ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் P.குகன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் D.லட்சுமி நாராயணசுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரோட்டரி சங்கம் சார்பில், சுபாஷ் கோயங்கா மற்றும் குழுவினர், கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அபர்ணா சுங்கு மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.



இந்த திட்டத்தை ரோட்டரி அமைப்பினர் D. லட்சமி நாராயணசாமி முன்னிலையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் ரோட்டரி பவுன்டேஷன் சார்பில் செல்வா K. ராகவேந்திரன், ரோட்டரி சர்வதேச மாவட்டம் முன்னாள் ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன் மற்றும் கோவை ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் மணீஷ் வியாஸ் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் திரட்டிய நிதியுடன் சர்வதேச ரோட்டரி அமைப்பின் நிதி உதவியையும் பெற்று மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 பேருக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கும், மொத்தம் 89 நோயாளிககுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க ரூ.68 லட்சத்திற்கான நிதியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாகத்திடம் காசோலையாக ரோட்டரி அமைப்பினர் வழங்கினர்.

இதுகுறித்து மேலும் டாக்டர் குகன் கூறியதாவது, இன்று நமது நாட்டில் மார்பக புற்றுநோய் என்பது நகர பகுதிகளிலும் கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது கிராம பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.

தற்போது உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவது மட்டுமில்லாமல் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை முழுமையாக குணப்படுத்தவும் கூட முடியும்.

ஆனால், இதுபோன்ற தரமான மருத்துவ சிகிச்சையை ஏழை மக்கள் பெறுவது என்பது கடுமையான சவாலாக உள்ளது.சில காரணங்களால் ஏழை மக்கள் பலரிடமும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் காப்பீட்டு திட்டமும் இருப்பதில்லை. இதனால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பலரும் தரமான சிகிச்சை கிடைக்காமல் இறந்து போகும் சூழல் உள்ளது.

இந்நிலையில் ரோட்டரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 'மிராக்கில்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 89 புற்றுநோயாளிகளின் வாழ்க்கையில் அதிசயம் நிகழும் என எதிர்பார்க்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...