சளி, ஜலதோஷம் உடனே நீங்க ஒரு எளிய பலன் தரும் மூலிகைத் தேநீர்! – பாக்கலாமா?

ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகம் படுத்திவிட்டு போகும் ஒரு வியாதி. ஜலதோசம் வந்தாலே, மூக்கை சிந்திக்கொண்டு அல்லது தொண்டை கட்டிக்கொண்டு, அவஸ்தையில் மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர் அழைப்பைத் தவிர்ப்பதும், அதனால் உண்டாகும் சிரமங்களும் பல உண்டு.
கிராமங்களில் அடிக்கடி சொல்வார்கள், ஜலதோஷம் ஒரு மோசமான வியாதி, மருந்து சாப்பிட்டலைன்னா குணமாக, ஏழு நாட்கள் ஆகும், மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டால், ஒரே வாரத்துலே சரியாகிடும் என்று. உண்மைதான்.

மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு வாரத்தில் சரியாகிவிடும்தான். ஆயினும், அலுவலகத்தில் பணியாற்றுவோர், மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பணியில் இருப்போர் அவ்வாறு இருக்க முடியுமா? ஜலதோஷம் போகும்வரை நரக வேதனையாகி விடுமே!

எவ்வாறு ஜலதோசத்தை சரி செய்வது?

மிக எளிமையான தீர்வுதான், மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகு என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்து, சித்த மருத்துவர்கள் நிறைய மருந்துகளுக்கு துணை மருந்தாக அல்லது அந்த மருந்திலேயே திரிகடுகம் கலந்து வழங்குவர்.

உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். மனிதனுக்கு அனைத்து வகையிலும் உடல் நலத்தைக் காக்கும் அரு மருந்தாக மும்மருந்துகள் கலந்த திரிகடுகம் விளங்குவதைப்போல, தமிழின் நன்னெறி நூலான திரிகடுகமும், ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற் கருத்துகளின் மூலம், மனிதர்களின் மனத் தீமை நீக்கும் நல்மருந்தாக,சமூக நல்வாழ்வுக்கு உறுதுணையாக விளங்குகிறது. இரண்டும் தமிழனின் நலனுக்கே, தமிழன் மூலம் உலகோர் நலனுக்கே என்பதே, இவற்றின் தனிச் சிறப்பு. மேலும் படிக்க....

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...