மணப்பெண்ணா நீங்கள்!! மணமேடையில் ஜொலிக்க 10 ஹேர் ஸ்டைல்கள் இதோ உங்களுக்காக !



ஒவ்வொரு பெண்ணும் தங்கள் திருமணத்தை பற்றிய கனவுகள், திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பர். திருமணத்திற்காக வாங்கும் நகைகள், உடைகள், மேக்கப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து வாங்குவார்கள். இவற்றையெல்லாம் செய்து விட்டு உங்கள் ஹேர் ஸ்டைல் மீது மட்டும் அக்கறை இல்லாமல் இருந்தால் எல்லாம் வீணாய் போகும் அல்லவா? எனவே மணப்பெண்கள் தங்களது ஹேர் ஸ்டைல் பற்றிய திட்டத்தை வைத்துக் கொள்ளவது நல்லது.

இந்திய மணப்பெண்களுக்காக நிறைய ஹேர் ஸ்டைல் அலங்காரங்கள் உள்ளன. இவற்றை தேர்ந்தெடுக்கும் போது உங்களது உடைகள், முகமைப்பு, கலாச்சாரம் மற்றும் முடியின் நீளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஹேர் ஸ்டைலிஸ்ட் தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த ஹேர் ஸ்டைல் அலங்காரங்கள் அழகாக அமையும்.

 à®‰à®™à¯à®•ளுக்கு தகுந்த ஹேர் ஸ்டைல்யை தேர்ந்தெடுக்க நேரம் மற்றும் மற்றவர்களின் கருத்தாய்வு தேவைப்படும். இங்கே நிறைய ஹேர் ஸ்டைல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது இதில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஹேர் ஸ்டைல்யை விரும்பாமல் உங்களுக்கு தகுந்த பொருத்தமான ஹேர் ஸ்டைல்யை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் ஒத்திகை பார்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இந்த கருத்துகளை பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் திருமணத்தில் அழகாக காட்சியளிப்பீர்கள்.

பிக் ரவுண்டு பண்: 



இந்த வகை ஹேர் ஸ்டைல் இந்திய மணப்பெண்களிடம் பொதுவாக காணப்படும் ஹேர் ஸ்டைல் ஆகும். ஒரு பெரிய ரவுண்டு வடிவில் பண் ரிங்கை பயன்படுத்தி இதை உருவாக்குவர். மேலும் இதன் நடுவில் அழகான கலர்புல்லான பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க் செய்து அலங்கரிப்பர். இந்த ஹேர் ஸ்டைலில் பண் ரிங்கை பயன்படுத்துவதால் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும். எனவே இந்த ஹேர் ஸ்டைல் நீண்ட நேர நிகழ்ச்சிக்கு ஏற்றது. இதிலும் சில பெண்கள் முக்காடு போட்டுக் கொள்வது இன்னும் அழகாக இருக்கும்.

டெக்கரேட்டிவ் பிளைட் : 



இந்த வகை ஹேர் ஸ்டைல் தென்னிந்திய மணப் பெண்களால் விரும்பப்படும் ஹேர் ஸ்டைல் ஆகும். திருமணத்திற்கான உடை புடவை என்றால் இந்த ஹேர் ஸ்டைல் மிகவும் பொருத்தமாக அமையும். மணப்பெண்களுக்கு நீளம் குறைந்த கூந்தல் இருந்தால் இந்த பிளைட்டை பயன்படுத்தி ஹேர் ஸ்டைல் பண்ணுவர். மேலும் இந்த பிளைட்டை புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக கலர்புல்லான பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க் செய்து அலங்கரிப்பர். இது பார்ப்பதற்கு கலாச்சாரம் சார்ந்த அழகு கிடைக்கும்.  Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...