உங்க முடி வறண்டு உதிர்கிறதா? இந்த பிரச்சனையை விரட்டும் எண்ணெய் எது தெரியுமா?

இயற்கை எண்ணெய்யை உங்கள் உடைந்த கூந்தலில் பயன்படுத்த, அது ஈரப்பதத்தை சேர்த்து சிக்கல் முடியிலிருந்து விடுதலை தருகிறது. அத்துடன், உச்சந்தலையில் உண்டாகும் பொடுகு தொல்லையிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.

உங்கள் உச்சந்தலையை, இயற்கை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய, அதனால் உங்கள் கூந்தலானது பளபளப்புடனும், மிளிரும் தன்மையுடனும் காட்சியளிக்கிறது. ஒப்பனை மற்றும் வேதி பொருள்கள் அடங்கிய மூலப்பொருட்களை வாங்க அதிகம் செலவாக, மலிவு விலையில் தீர்வினை தந்து, உங்கள் கூந்தல் வளர்ச்சியினை அதிகமாக்கவும் எளிதில் இவை உதவுகிறது.

உங்கள் கூந்தலில் வண்ணம் பூச (கலரிங்க்) விருப்பப்பட்டால், அது உங்கள் உச்சந்தலையின் நலத்தை பாதிப்பதோடு, பயங்கரமான விளைவுகளையும் உண்டாக்குகிறது. உங்கள் உச்சந்தலையில் இயற்கை எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலமாக...இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதோடு, முடி உதிர்தல் பிரச்சனைக்கும் ஒரு புற்றுபுள்ளி வைக்க பெரிதும் உதவுகிறது.

இங்கே சில இயற்கை எண்ணெய்களையும் அவற்றின் செயல்பாட்டினால் எப்படி நம் முடியை பாதுகாப்பது என்பது பற்றியும் இப்பொழுது பார்க்கலாம்.

அர்கன் ஆயில்: 

இதனை ‘மொரக்கன் ஆயில்' என்றும் அழைப்பர். முடிகளுக்கு பயன்பாட்டினை தரும் இந்த இயற்கை எண்ணெய், சமீபத்தில் பிரசித்தி பெற்ற இயற்கை எண்ணெய்கள் பலவற்றுள் ஒன்றாகவும் இருக்கிறது. 

உங்களுடைய தினசரி கூந்தல் பாதுகாப்பில் இந்த அர்கன் ஆயிலை பயன்படுத்துவது சிறந்ததாகவும் கட்டாயமாகவும் இருக்கிறது. மேலும் இந்த அர்கன் ஆயிலை கொண்டு பொருட்களும், நம் கூந்தலை பாதுகாக்க பல இருக்கிறது.

இந்த அர்கன் ஆயிலில் வைட்டமின் B, வைட்டமின் E, மற்றும் அத்தியவாசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்க, அது உங்கள் உச்சந்தலை முடியை ஆரோக்கியமாகவும்... மேலும் சோர்வடைந்து, சேதமடைந்து காணப்படும் முடிகளை பளபளப்பாகவும் புதுப்பிக்க வல்லதாகும்.

தேங்காய் எண்ணெய்: 

மற்ற எண்ணெய்களை காட்டிலும், இந்த தேங்காய் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் K மற்றும் ஏனைய அத்தியவாசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்க, உங்கள் உச்சந்தலைக்கு தேவையான அதிக ஊட்ட சத்தினையும் இது தர வல்லது. 

உங்கள் உச்சந்தலையை, மிதமான சூட்டோடு இருக்கும் தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்க்க, உங்கள் கூந்தலானது... மென்மையாகவும், மிருதுவாகவும், வலிமையான வேர்களையும் கொண்டிருக்கிறது. அத்துடன், இந்த தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலமிருக்க, அது உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைப்பதுடன், நீரேற்றம் பண்பினையும் கொண்டிருக்கிறது.

ரோஸ்மேரி எண்ணெய்: 

ரோஸ்மேரி அத்தியவாசிய எண்ணெய், உச்சந்தலையில் இருக்கும் நஞ்சினை நீக்க வல்லதாகும். அதோடு, அதிகளவில் இரும்பு சத்தும், வைட்டமின் B, மற்றும் கால்ஷியமும் இருக்க, அது உங்கள் உச்சந்தலையை தூய்மையாக வைத்துகொள்வதோடு, இயற்கையாகவே கூந்தலை தடிமனாக்கவும் உதவுகிறது. 

உங்களுடைய உச்சந்தலையை ரோஸ்மேரி அத்தியவாசிய எண்ணெய் கொண்டு தடவி மசாஜ் செய்ய, அது உங்கள் முடியினை முதிர்ச்சி பருவத்திலிருந்து காக்க பெரிதும் உதவுகிறது. 

எப்பொழுது நீங்கள் இந்த ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் கேரியர் எண்ணெய் கொண்டு சுத்திகரிக்க வேண்டியது அவசியமாகும்.




அவாகடோ எண்ணெய்: 

இந்த எண்ணெய்யில் அதிகளவில் புரத சத்தும், கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் A, E மற்றும் D இருக்க, அவாகடோவிலிருந்து இந்த எண்ணெய் எடுக்கப்படுகிறது என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும். 

இந்த அவாகடோ எண்ணெய்யில் காணப்படும் புரதமானது, உங்கள் கூந்தலை தடிமனாகவும், வலுவாகவும் வைத்துகொள்ள உதவுகிறது. 

அத்துடன், உலர்ந்த பிரிவு முடக்கிகளிடமிருந்தும், மந்தமான கூந்தலில் இருந்தும் என மற்ற பிரச்சனைகளிலிருந்து விடுதலை தருகிறது. ஏனென்றால், இந்த அவாகடோ எண்ணெய் தடிமனாக இருக்க, இது நடுத்தர கூந்தல் முதல் தடித்த கூந்தல் வரை, அனைத்து தன்மையான கூந்தல் பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

ஜொஜோபா எண்ணெய்: 

ஜொஜோபா எண்ணெய் கொண்டு உச்சந்தலையை தினமும் மசாஜ் செய்துவர, அது உங்கள் கூந்தல் கருமுட்டைகளை தடிமனாக்கி, முடி உதிர்தலையும் தடுக்கிறது. 

அத்துடன், இந்த எண்ணெய், உங்கள் உச்சந்தலையில் உண்டாகும் பொடுகினையும் நீக்கி, மற்ற அனைத்து முடி பிரச்சனைகளுக்கு தீர்வினையும் தருகிறது. 

கூந்தலுக்கான பொருட்கள் பல இருக்க, அதில் இந்த ஜொஜோபா எண்ணெய் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகவும் இருக்கிறது. மேலும், இந்த ஜொஜோபா எண்ணெய்களை கொண்டு உருவாக்கிய பொருட்கள், மென்மையானதாகவும், ஆடம்பரமானதாகவும் இருக்கிறது.




ஆலிவ் ஆயில்: 

மற்ற அனைத்து ஆயில்களைகாட்டிலும், அனைவரது மனம் கவர்ந்த ஒன்றாக இருக்கும் ஆலிவ் ஆயில், உங்களுடைய சருமம் மற்றும் முடி பிரச்சனைகளிலிருந்து காத்து பெரும் உதவி புரிகிறது. 

உங்கள் கூந்தல் வரண்டு போவதோடு, சேதமடையும் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய்யை நாம் உச்சந்தலையில் தேய்ப்பது நன்மை பயக்கிறது. 

அத்துடன் ஆழமான ஈரப்பதத்தினை கொண்டுள்ள இந்த ஆலிவ் எண்ணெய், உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு...உச்சந்தலையையும் ஈரப்பதமிக்கதாய் எப்பொழுதும் வைத்துகொள்ள முன்வருகிறது. 

இந்த ஆலிவ் ஆயிலோடு, கேரியர் ஆயிலை கலந்து அதன் பின் உச்சந்தலையில் தேய்ப்பது மிகவும் நல்லதாகும். அது உங்கள் முடியின் எடையினை ஒருபோதும் குறைப்பதும் இல்லை.

மாதுளை விதை எண்ணெய்:

நல்ல கூந்தலை நீங்கள் பெற, மாதுளை விதை எண்ணெய் உங்களுக்கு சிறந்த தீர்வினை தருகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான ப்யூனிக் அமிலம், உங்களுடைய கூந்தலின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதுடன், கூந்தல் வரண்டு போகாமல் பாதுகாக்கவும், சேதத்திலிருந்து காக்கவும் பெரிதும் உதவுகிறது. 

சிறந்த பாதுகாவலனாக பயன்படும் இந்த மாதுளை விதை எண்ணெய், தீங்குவிளைவிக்கும் சுற்றுசூழல் காரணிகளிடமிருந்தும் நம் முடியினை பாதுகாக்க பயன்படுகிறது. அதனால், மாதுளை விதைகளை எடுத்துகொண்டு, உங்கள் உச்சந்தலையில் தேய்ப்பது சிறந்த சிகிச்சையாக அமைகிறது

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...