நாள் முழுவதும் கலைப்பாக உணர்கிறீர்களா? இதோ உங்களுக்காக 4 சூப்பர் டிப்ஸ்!

நம்மில் பலருக்கு ஏன் நாம் எப்போது பார்த்தாலும் சோர்வாகவும் கலைப்பாகவும் இருக்கிறோம்? சரியாக தூங்கினாலும் எப்போதும் ஏன் இந்த கலைப்பு ஏற்படுகிறது என நினைப்போம். சில சமயங்களில் இது ஏதேனும் உடல்நலக்கோளாறுகளால் ஏற்படலாம். நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். 

ஆரோக்கியமாக 100 வயசு வாழ என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? 

மருத்துவர் உங்களுக்கு ஒன்றுமில்லை நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால், இது நீங்கள் அதிக நேரம் வேலை செய்வதாலும், சரியான அளவு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாததாலும் சோர்வாக உணருவீர்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

விட்டமின் பி12 

விட்டமின் பி12 உங்கள் மூளைக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை இருக்கிறது. இது மூளைக்கு சுறுசுறுப்பையும், நியாபக திறனையும் அளிக்கிறது. மாமிசம், சீஸ், மிருகங்களிடம் இருந்து கிடைக்கும் பொருட்களில் விட்டமின் பி12 இருக்கிறது

கோலின் 

கோலின் உங்களது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. கோலின் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கு சோர்வான உணர்வு இருக்காது. தினமும் இரண்டு பெரிய அளவு முட்டை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் இழந்த சத்துக்கள் மீட்கப்படுகின்றன. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

விட்டமின் டி3 

விட்டமின் டி3 எடுத்துக்கொள்வதால் சோர்வு நீங்குகிறது. விட்டமின் டி3 மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. சூரிய ஒளியில் தினமும் 20 நிமிடங்கள் நிற்பதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான விட்டமின் டி3 கிடைக்கிறது.

மெக்னீசியம் 

உங்களுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் மெக்னீசியம் எடுத்துக்கொள்ளலாம். தினமும் அரை கப் அளவு நட்ஸ் மற்றும் கீரை வகைகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான முழுமையான சத்துக்கள் கிடைக்கின்றன

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...