நைட் லேட்டா சாப்பிடற பழக்கம் இருக்கிறவரா நீங்க? என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

இரவில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி சாப்பிட்டால் ஆரம்பக் கட்டத்தில் உடல் எடை அதிகரிக்கும், உடலில் இன்சுலின் அளவி அதிகமாகும், கொழுப்பு சத்து அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு உணவை 7 மணிக்கு முன் சாப்பிட்டுவிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கமின்மை நம் உடலில் உடல் எடை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் அதுவே, சரியான நேரத்தில் சாப்பிடும் போது தூக்கம் சரியாகும், மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்யும் என்று நின்னி கோயெல், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இணை பேராசிரியர், பெரெல்மேன் மெடிசின் மருத்துவத்தின் முதன்மை எழுத்தாளர் கூறுகிறார்.

கொலஸ்ட்ரால் : 

இரவில் நேரம் கழித்து சாப்பிடுவது உடலில் எடையை அதிகரிப்பு பிரச்சனை, ஆற்றல் குறைவு மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இவற்றால், இரத்த சர்க்கரை அளவு, கொழுப்புச்சத்து ஆகியவை அதிகமாக வாய்ப்பு உண்டு. இவை இருதய நோய்களையும், பிற உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று கோயல் கூறுகிறார்.

பரிசோதனை : 

பாஸ்டனில் உள்ள அசோசியேட்டட் ப்ராஜெக்ட் ஸ்லீப் சொசைஸ்டி எல்.எல்.சி. (APSS) 31 ஆவது வருடாந்த கூட்டத்தில் SLEEP 2017 இல் வழங்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள், பகல்நேர உணவுப் பொருள்களுடன் ஒப்பிடும் போது தாமதமாக உண்ணும் உணவு வளர்சிதை மாற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஒரு ஆய்வில், 9 பேரை 2 வகையான பிரிவுகளில் ஈடுபடுத்தினர். இதில், பகல் பொழுதில் சரியான நேரத்தில் அதாவது காலை 8 மணி முதல் மாலை 7 வரை 3 முறை சாப்பிடுபவர்கள், அடுத்த பிரிவினர் மதியத்திலிருந்து இரவு 11 மணி வரை தாமதமாக சாப்பிடுபவர்கள் என இரு வகைகளில் 8 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் : 

இதில் சரியான நேரத்தில் சாப்பிடுபவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை. தாமதமாக சாப்பிடுபவர்கள் இரவு 11மணி முதல் 9வரை தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில், தாமதமாக சாப்பிடுபவர்கள் மற்றவர்களோடு பார்க்கும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்கள்.

உடல் பருமன் : 

உடலிலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவை பொருத்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படும். இதுவே, உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தும். தாமதமாக சாப்பிடும் போது உடலில் வளர்கிதை குறைந்து கொழுப்பு சத்தை அதிகரித்துவிடும். ஆய்வுகளின் முடிவுகள்படி உடலில் அநேக பிரச்சனைகளை உணடு பண்ணும் என்று தெரிகிறது. இரவில் சீக்கிரம் சாப்பிடும் போது உடலில் எந்த நோயும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...