ஜொலிக்கும் சரும அழகை கேரட் கொண்டு எப்படி பெறுவது? அசத்தும் குறிப்புகள்!!

சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும் கேரட்டில்...அதிகளவில் வைட்டமின்களும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருப்பது உங்கள் சருமத்திற்கு இன்னும் பல வழிகளில் உதவி செய்ய முன்வருகிறது. இந்த சருமத்தை பாதுகாக்க துடிக்கும் வேர் காய்கறியான கேரட்டை உலகம் முழுவதும் பயன்படுத்தி, தங்களுடைய சரும பிரச்சனைகளுக்கு தீர்வினை காண பலரும் விருப்பம் கொள்கின்றனர். இன்று 'போல்ட்ஸ்கை' பத்திரிக்கையின் வாயிலாக...சருமத்தை புத்துணர்ச்சிகொள்ள உதவ முன்வரும் கேரட்டை பற்றியும், இந்த வேரிலிருந்து நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய... பல சரும பிரச்சனைகளுக்கான தீர்வினை பற்றியும் நாம் இப்பொழுது பார்க்கலாம்.

இந்த வழிகள் நூறு சதவிகிதம் இயற்கையாகவும், பாதுகாப்பானதாகவும், மலிவானதாகவும், மேலும் முக்கியமாக சிறந்த மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இவற்றை வீட்டிலிருந்தபடியே நாம் முயற்சி செய்து பார்க்க ஏதுவாக இருப்பதுடன், உங்கள் சருமத்திற்கு சமையலறை மூலம் கிடைக்கும் நண்பனாகவும் இதன் மூலப்பொருள்கள் அமைகிறது. 

இந்த வழிமுறைகளை பின்பற்றி, கேரட்டை கொண்டு உங்கள் சருமத்தை அழகுபடுத்தி தான் மகிழுங்களேன். அத்துடன் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைக்கவும் இந்த கேரட் நமக்கு உதவுகிறது. இயற்கை காட்டும் அழகிய வழியின் வாயிலாக அவற்றை பற்றின சில குறிப்புகளை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

கேரட்டை தேனுடன் பயன்படுத்துவது எப்படி: 

பாதி கேரட்டை நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டு பொருட்களையும் நன்றாக கலக்கி கொள்ளுங்கள். தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கறைகள் இருக்கும் இடத்தில் பூசிகொள்ளுங்கள். அதன்பின்னர், 10 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு உங்கள் முகத்தை கழுவி முகப்பருக்களிலிருந்து விடுதலை பெற்று அழகிய சருமத்தை பெறுங்கள். வாரத்தில் ஒரு முறை இந்த சிகிச்சையை நீங்கள் செய்துவர...சருமத்திற்கான பிரச்சனைகள் உங்களை விட்டு விலகி ஓடும்

கேரட்டை முட்டையின் வெள்ளை கருவுடன் பயன்படுத்துவது எப்படி: 

ஒரு பௌலில், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அரைத்த கேரட்டை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவை பொருளை எடுத்துகொண்டு...அதனை நன்றாக கலக்கி, அதன் பின்னர் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி 15 நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டும். 

அதன் பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு கழுவ வேண்டும். ஒரு ஒளி தோல் டோனர் பயன்படுத்துவதன் மூலம் இதனை பின்பற்றவும். இந்த புத்துணர்ச்சிகொண்ட முகமூடியினை வாரம் ஒரு முறை பயன்படுத்தி பலனை அடையலாம்.

கேரட்டுடன் ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது எப்படி: 

கேரட்டின் பாதியை நன்றாக அரைத்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் கலந்துகொள்ள வேண்டும். அதன்பின், வீட்டிலே தயாரித்த கலவையை உங்கள் தூய்மையான முகத்தில் தேய்த்து...10 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூட்டோடு இருக்கும் தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். அந்த கலவை, உங்கள் சருமத்தில் ஏற்படும் கடினம் மற்றும் உலர்தல் தன்மையை போக்க உதவுகிறது. இந்த வீட்டில் தயாரித்த கலவையை கொண்டு உங்கள் சருமத்தில் புத்துணர்ச்சி பொங்க செய்ய...இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த வைத்தியத்தை நீங்கள் செய்யலாம்.

கேரட்டை எழுமிச்சை ஜூஸுடன் உபயோகிப்பது எப்படி: 

இது கேரட்டை கொண்டு உங்கள் சருமத்தை புத்துணர்ச்சி அடைய உதவும் மற்றுமொரு வழியாகும். அரைத்த கேரட்டினை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துகொண்டு...அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் எழுமிச்சை ஜூஸையும் சேர்க்க வேண்டும். 

அந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து...இருபது நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இந்த தோல் புத்துயிர் கலவையை, மாதத்தில் இரண்டு முறை பயன்படுத்திவர...நல்லதோர் தீர்வாக உங்கள் சரும பிரச்சனைகளுக்கு இது அமைகிறது.

கேரட்டுடன் கடலைமாவு மற்றும் மோரின் பயன்பாடு: 

அரைத்த கேரட் மற்றும் மோரை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொண்டு..அத்துடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவையும் சேர்க்க வேண்டும். இந்த வீட்டில் தயாரித்த கலவையை உங்கள் முகத்தில் தேய்த்துகொள்ள சருமத்தை புத்துணர்ச்சி உடையதாக இது மாற்றுகிறது. அதன்பின் பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு கழுவ வேண்டும். உங்கள் தோல் நன்றாக வரண்டுவிட...அதன் பிறகு லைட் மாய்ஸ்சரைசரை தேய்க்க வேண்டும். இதனை மாதந்தோறும் தொடர்ந்து செய்து வர...உங்கள் சருமம் புத்துணர்ச்சி அடையுமென்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்

கேரட்டை வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலோடு சேர்த்து பயன்படுத்துவது எப்படி: 

வெண்ணெய்யை நன்றாக கூளாக்கி...அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸையும் கலக்க வேண்டும். இந்த வீட்டில் தயாரித்த கலவையைகொண்டு உங்கள் முகத்தில் மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு...தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இந்த கலவையை மாதந்தோறும் நாம் பயன்படுத்திவர நல்லதோர் முடிவினை நமக்கு அது தருகிறது

கேரட்டுடன் லாவெண்டர் எண்ணெய்யை உபயோகிப்பது எப்படி: 

பாதி கேரட்டை எடுத்துகொண்டு அதனை அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை, உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து கொள்ளுங்கள். அதன்பின் பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதியை கழுவுங்கள். இந்த ஆச்சரியமூட்டும் எளிய வழிமுறையை... வாரம்தோறும் பின்பற்றி அழகிய சருமத்தை பெறுங்கள்.

கேரட்டை புல்லர் எர்த்துடன் பயன்படுத்துவது எப்படி: 

ஒரு கலப்பானில் கேரட்டை போடுங்கள். அதன் மூலமாக கிடைக்கும் ஜூஸை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துகொண்டு...அத்துடன் ஒரு டீ ஸ்பூன் புல்லர் எர்த்தையும் கலந்து கொள்ளுங்கள். 

இந்த கலவையை உங்கள் முகத்தில் பூசி கொள்ளுங்கள். அது காயும் வரை காத்திருந்து, பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு...முகத்தை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு கழுவிகொள்ளுங்கள். அதன் பிறகு பேஷ் வாஷை நீங்கள் பயன்படுத்தலாம். மாதம் ஒரு முறை, வீட்டிலே தயாரிக்கப்பட்ட கலவையை நீங்கள் உபயோகித்துவர...உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைக்க அது உதவுகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...