காற்று மாசுபடுவதால் மனிதனுக்கு உண்டாகும் நோய்கள்!!

இன்றைய காலகட்டத்தில் உலகில் நிலவும் மிக முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று சுற்றுசூழல் மாசு. இதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதுப்புக்கள் மிக ஆபத்தானவை. 

சுற்றுசூழல் மாசுவை நீர், காற்று, மண், ஒலி மற்றும் ஒளி என 5 வகைப்படும். இதில் மிகுற்த பாதிப்பை ஏற்படுத்துபவை காற்று மாசு. காற்று மாசுவினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்றால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவை. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுக்கள் என்றால், புகை, தூசு, க்ளோரோ ப்ளோரோ கார்பன், புகையிலை புகை, சல்பர், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, இன்னும் பிற...

தண்ணீர் மாசு பெரும்பாலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் நீர்நிலைகளில் விடப்படுவதால் ஏற்படுகிறது. மண் மாசு அதிகப்படியாக உபயோகிக்கும் விவசாய உரங்களாலும், அமில மழையினாலும் உண்டாகிறது. ஒலி மாசுபாடு அளவுக்கு மீறிய ஒலியை திருவிழாக்களிலும், மற்ற பொது இடங்களிலும் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. ஒளி மாசுபாடு வெளிச்சம் மற்றும் வானியல் குறுக்கீடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது/ 

இந்த மாசுக்கள் அனைத்துமே கடுமையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் சில ஆரோக்கி பாதிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி படித்து தெரிந்துக் கொள்வோம்.

ஆஸ்துமா 

ஓசோன் என்னும் வாயுவில் உள்ள முக்கிய கூறுகள் நுரையீரல்களுக்கு மற்றும் சுவாசக்குழாய்களுக்கும் மிகுந்த எரிச்சரை ஏற்படுத்தக்கூடும். புகை மற்றும் தூசி ஆஸ்துமாவை எளிதில் ஏற்படுத்தக்கூடும்.

புற்றுநோய் 

வெளிப்புற காற்று மாசுபாட்டின் பல கூறுகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக இருக்கின்றன. டீசல் என்ஜின் புகை வெளியேற்றுதல், கரைப்பான்கள், உலோகம் போன்றவை நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன. 

UV கதிர்களின் அதிகப்படியான வெளிப்பாடு, இவற்றால் ஏற்பட்ட ஓசோன் அடுக்குகளின் ஓட்டை போன்றவை தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

மூச்சுக் குழாய் அலர்ஜி 

சில காற்று மாசுக்கள் நுரையீரலில் மற்றும் மூச்சுக் குழாய்களில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். புகையிலை புகை, தூசி, புகை போன்றவையும் அலர்ஜியை உண்டாக்கும். அடிக்கடி புகையில் இருந்தால் அது நீண்ட நாள் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். 

சரும அலர்ஜி 

நீண்ட நேரம் மாசடைந்த காற்றில் இருக்கின்ற போது சரும அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அபோபிக் டெர்மடிடிஸ், எக்ஸிமா, சொரியாசிஸ் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகள் அதிக நேரம் மாசுபட்ட காற்றில் இருப்பவர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சளி மற்றும் இருமல் 

காற்று மாசுபாட்டினால் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே சளி தொல்லை இருப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக்கி, நுரையீரலில் சளியை வெளியேற்றிக் கொண்டே இருக்கும். இது இருமல் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...