30 வயது கடந்தவர்களா நீங்கள்? இந்தமாதிரி அக்கறை காட்டுனா ஆரோக்கியமா இருப்பீங்க எப்பயும்...

மனித வாழ்வில் முதுமையை ஆரம்பிக்கும் முதல் கட்டம் என்றால் அது 30 வயதை அடைவது தான். 30 வயது ஆனால் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் புதிய உடல் பிரச்சனையை சந்திப்பீர்கள். அப்படி எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், சிறு சிறு செயல்களில் அக்கறை செலுத்த வேண்டும். 

அன்றாடம் நாம் செய்யும் வேலைகளில் சிறிது கவனம் செலுத்தி செய்தால் அதுவே உடற்பயிற்சி செய்தது போன்ற பலனைத் தரும். வயதாகிவிட்டது என்று நினைத்து நீங்களே உங்களை சோர்வாக்கிக் கொள்ளாதீர்கள். அதுவே, உங்களை மிகுந்த பலவீனமாக மாற்றிவிடும். 30 வயதைக் கடந்த பெரும்பாலானோர், வேலைக்கு செல்பவராக இருக்கின்ற நிலையில் தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

எனவே, 30 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். தனியாக நேரம் செலவிடும் வேலை எல்லாம் இல்லை. அன்றாடம் செய்பவை தான். வாருங்கள் இப்போது அவற்றை படித்துத் தெரிந்துக்கொள்ளலாம்.. 

இயற்கை காய்கறிகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை. பெரும்பாலும், பச்சை காய்கறிகள் தான் உடலுக்கு எப்போதுமே சிறந்தது. இவற்றை உணவுகளில் அதிகமாக சேர்க்கும் போது வாழ்நாள் கூடும், வளர்சிதை மாற்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். உடல் எடையை சீராக வைக்க உதவும்.

எடையை சோதித்தல் 

எல்லா வயதினரும், குறிப்பாக 30 வயதை கடந்த அனைவரும் குறிப்பிட்ட கால இடைவேளையில் உடல் எடையை சோதிக்க வேண்டியது மிக முக்கியம். அப்பொழுது தான் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நமமால் உணர முடியும். உடல் எடை அதிகரித்தால் நாம் அதிகமாக உண்ணுகிறோம் என்று தெரிந்துவிடும். எனவே, உணவு கட்டுப்பாடும் தானாக வந்துவிடும். ஆரோக்கியமும் நன்கு இருக்கும்.

ஆரோக்கியத்தை கவனிக்கவும் 

நீங்கள் எப்பொழுதும் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் கொள்ளவேண்டும். சாப்பிடும் உணவு உடலுக்கு ஏற்றதாக இல்லையென்றால் நிச்சயம் ஏதாவது அலர்ஜியை ஏற்படுத்தும். அதை நீங்கள் கவனித்தால் தான் அடுத்தமுறை அந்த உணவை ஒதுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும். இதுபோன்ற சிறு சிறு விஷயங்களில் அக்கறை செலுத்தியால் தான் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க முடியும்




சமைக்க கற்றுக்கொள்ளுங்கள் 

உங்கள் கையால் நீங்கள் சமைத்து சாப்பிடும் போது நிச்சயம் செலவு குறையும். வேலைக்கு போவதால் கடைகளில் சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், அது உடலுக்கு கேடு தான். 30 வயதை கடந்தவர்களுக்கு இது சிறந்த ஆரோக்கிய வழிமுறையாகும்.

குளிர்சாதனப்பெட்டியில் காய், பழங்களை வைப்பது 

பசி என்று வந்தால் உணவு ஆரோக்கியமானதா இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டோம். அருகில் கிடைக்கும் உணவுகளை பெற்று உடனே சாப்பிட தான் பார்ப்போம். எனவே, இனிமேல் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தயாராக வைத்திருந்தால் பசிக்கும் நேரத்தில் அதனை எடுத்து சாப்பிடலாம். பசியும் போகும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்

கொழுப்பு உணவுக்கு பயப்படு வேண்டாம் 

ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ள உணவுகளை சாப்பிட எப்பொழுதும் பயம் தேவை இல்லை. வயதாகிவிட்டது கொழுப்பை சேர்க்கக்கூடாது என்றெல்லாம் இல்லை. அவக்கேடோ மற்றும் நட்ஸ் வகைகளில் சிறந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

காரசாரமான உணவுகள் 

எண்ணெய் பொரித்த உணவுகள் அனைவருக்கும் பிடிக்கும் தான், ஆனால் ஆரோக்கியம் கருதி அதனை பெரும்பாலானோர் தவிப்பார்கள். எண்ணெய் உணவுகளுக்கு பதிலாக காரசாரமான உணவுகளை தாராளமாக சாப்பிடலாம். நா சுவைக்கு இது சிறந்த உணவாகும். மசாலா பொருட்கள் நல்ல சத்துக்கள் உள்ளன, உதாரணததிற்கு கிராம்பில் சர்க்கரை அளவை குணப்படுத்தும் தன்மை உள்ளது. மஞ்சளில் புற்றுநோயை தடுக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன

உணவின் தரம் தான் முக்கியம் 

துரித உணவுகளில் உள்ள கலோரிகளை உடல் ஏற்றுக்கொள்ளாது. இந்த உணவுகளில் உள்ள கலோரிகள் உடலில் பசியை அதிகரித்து, அதிகமாக சாப்பிட வைத்து உடல் எடையைக் கூட்டிவிடும். எனவே, 30 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது.

சர்க்கரை அளவை குறைக்க வேண்டும் 

உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணம் சர்க்கரை அதிகமாக உட்கொள்ளுவது. சர்க்கரை அதிகமாக சாப்பிடும் 38 சதவிகித பேருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு முறை சர்க்கரை சேர்க்கிறோம் என்றால், அது 10 கிராமிற்கு அதிகமாக இருக்கக்கூடாது.

உடற்பயிற்சி 

தினமும் உடற்பயிற்சி செய்வது ஒரு சிறந்த ஆரோக்கிய முறையாகும். உடலில் இருந்து வியர்வை வெளியேறினால் தான் உடல் ஆரோக்கியமாகவும், உடல் எடை கட்டுப்பாட்டோடும் இருக்கும். 30 வயதை கடந்தவர்களுக்கு இது மிக முக்கியமாக அறிவுரை.

உடலுழைப்பு அவசியம் 

இன்றைய காலத்தில் வேலை என்பது உட்கார்ந்து செய்யும் வேலையாகத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வேலை என்றால் அது உடல் எடையை அதிகரிப்பு, இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஆகியவை முதல் இறப்பு வரை ஏற்பட வாய்ப்புகளை அதிகரிக்கும். சிறிது நேரத்திற்கு ஒரு முறையாவது உடலுழைப்பு மிக அவசியம். சிறிது தூரம் நடப்பது போன்றவற்றை செய்வது சிறந்தது.

டயட் உணவுகள் வேண்டாம் 

உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம் என்று பலர் பாட்டில் ஜூஸ்கள் அல்லது பாக்கெட் உணவுகளை சிறிது சாப்பிட்டுவிட்டு உணவை தவிர்த்து விடுவார்கள். இது மிக மோசமான ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவை வயிறு நிறைய சாப்பிட்டாலும் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

காலையில் சீக்கிரம் விழிப்பது 

சீரான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கும் பழக்கம் எப்போதுமே சிறந்தது. விடுமறை நாட்களிலும் அப்படி எழுந்தால் உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மேலும், உடற்பயிற்சி செய்ய சிறிது நேரமும் கிடைக்கும்.




மாடிப்படி ஏறுதல் 

அலுவலகங்களில் லிப்ட் உபயோகிக்காமல், மாடிப்படிகளை உபயோகியுங்கள். இது உடலுக்கு சிறிது உடற்பயிற்சி செய்த பலனைத் தரும். மேலும், உடலில் அதிகப்படியாக உள்ள கலோரிகளை குறைக்கும். தினமும் இப்படி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சாப்பாடை தவிர்க்காதீர் 

சாப்பிடாமல் இருந்தால் நிச்சயம் பசி அதிகமாகும். அப்படி பசிக்கும் சாப்பிடாமல் விட்டுவிட்டால், உங்கள் உடல் இரத்தத்தில் உள்ள குளுகோஸை எடுத்துக்கொண்டு பசியைத் தூண்டும் ஹார்மோன்களை அதிகரித்துவிடும். இது பசியை மேலும் அதிகரித்துவிடும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...