இத தினமும் சாப்பிட்டா, வாதத்தில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்!

கீல்வாதம் என்பது மூட்டு வலியின் சிக்கலான ஒரு நிலை. இதனால் ஏற்படக்கூடிய வலி மிகுந்த வேதனையை அளிக்கும் வகையில் இருக்கும். இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படக்கூடியது. பொதுவாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படும்.

சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படாத யூரிக் அமிலம் உடலில் சேரும் போது அது மூட்டுகளில் கீல்வாதம் என்னும் பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் என்னவென்றால், மூட்டுகளில் வலி, நீர்வீக்கம், உடல் சூடு, மூட்டுகள் சிவந்து இருப்பது போன்றவை தான். பெரும்பாலும், இது கால்களில் பெருவிரல் கீழே தான் ஏற்பட்டு, தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். இந்தக் கட்டுரையில் நாம் கீல்வாதத்திற்கான ஒரு சிறந்த மருந்தைப் பற்றி பார்ப்போம். சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஜூஸ் ஒன்றை தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூஸில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பயன்களும், செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன் அன்னாசி?

அன்னாசியில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி, உடலினுள் உள்ள அழற்சி மற்றும் காயங்களைக் குறைக்கும். 

அன்னாசியில் உள்ள நொதிப் பொருள், புரோஸ்டாகிளாண்டின் சேர்க்கையை பாதிக்கிறது அதாவது இந்த நொதிப்பொருள் உடலினுள் வீக்கத்தை உண்டாக்கும் சமிஞ்கையை அனுப்பும் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தும்.

கீல்வாதமானது அதிகப்படியான புரோட்டீன் நிறைந்த டயட்டை மேற்கொள்வதுடன் தொடர்பு கொண்டுள்ளது. அன்னாசியில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி உடலில் உள்ள அதிகப்படியான புரோட்டீன்களை செரித்து, கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்




ஏன் மஞ்சள்? 

மஞ்சளில் உள்ள குர்குமின், வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். குர்குமின் புரோட்டீன் உற்பத்தியைத் தடுத்து, இரத்தக் குழாய்களை பெரிதாக்க சொல்லும்




ஏன் இஞ்சி? 

இஞ்சி கேப்சைசின் என்னும் பொருளுடன் தொடர்புடைய ஜின்ஜெராலைக் கொண்டிருக்கிறது. 

மூலக்கூறு அளவில், ஜின்ஜெரால்கள் கேப்சைசினைப் போலவே கட்டமைக்கப்படுகின்றன. இது மூளைக்கு அனுப்பப்படும் வலிக்கான சிக்னல் தூண்டப்படுவதைத் தடுக்க உதவுகிறது. 

இது அழற்சியை உண்டாக்கும் நொதிகளின் அளவைக் குறைக்கவும் செய்யும்.

ஏன் செர்ரி ஜூஸ்? 

செர்ரி உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளதால், கீல்வாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும். தொடர்ச்சியாக இதனைக் குடித்து வந்தால், அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.




செய்முறை: 

அன்னாசியை துண்டுகளாக்கி ப்ளெண்டரில் போட்டு, அத்துடன் செர்ரி ஜூஸ், மஞ்சள் தூள், இஞ்சி பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி 1 1/2 வாரம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை: 

இந்த பானத்தை ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து குடிக்கலாம். முக்கியமாக இந்த பானத்தை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் கீல்வாதத்திற்கான அறிகுறிகளில் இருந்து விடுபடுவதோடு, வலியும் குறையும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...