வாய்ப்புண்ணால் அவதிப்படறீங்களா? இதோ உடனடி நிவாரணம்!!

சமீபத்தில் உங்கள் வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் 'வாய்ப்புண்' (MOUTH ULCER) என நாம் அழைக்கிறோம். 

காரணம்?

உங்கள் உடம்பு சம நிலையற்று மலச்சிக்கல், அசிடிட்டி, சத்து பற்றாக்குறை, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வர வாய்ப்பாகவும் இருக்கிறது. வாய்ப்புண் தோன்ற மற்ற சில முக்கிய காரணங்களாக உடல் உஷ்ணமும், அதிகம் புகைப்பிடிக்கும் பழக்கமும், மனஅழுத்தமும், உங்கள் பற்களை பாதுகாக்க தவறுவனவும் இருக்கிறது. 

இந்த புண்ணால் ஏற்படும் வலிக்கு எத்தகைய மருந்துகளும் வேண்டியதில்லை என்கின்றனர். இந்த வலி உங்களுக்கு இரண்டு நாட்களும் தொடரும்...சில சமயங்களில் ஒரு வாரம் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதாம். அதிகமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் அல்சர் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுகிறது. நீங்கள் உபயோகிக்கும் டூத்பேஸ்டில் சோடியம் லாரில் சல்பேட் இருக்குமாயின்..கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்புண் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிற

இது உங்கள் வாய்களில் வெள்ளை அல்லது சிவப்பு நிற திட்டுகளை உண்டாக்ககூடியதாகும். 

ஆயுர்வேதத்தின்படி, உடம்பில் இருக்கும் அதிக உஷ்ணத்தால் வாய்ப்புண் ஏற்படுகிறது . இந்த அதிக உஷ்ண நிலை அல்லது B12 வைட்டமின் குறைபாடுகளால், நம் வாய் தான் முதலில் பாதிக்கப்படுகிறதாம்.

உங்கள் நாக்கின் நடுபுறத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால்...உங்களுடைய உடம்புக்கு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் தேவை என அர்த்தமாகும். உங்களுடைய நாக்கு, தட்டான் நாக்காக (Scalloped Tongue) இருந்தால், ஈர்களில் இரத்தம் வடிந்துகொண்டே இருக்கிறது. அப்படி என்றால், நமக்கு போலிக் அமிலம், வைட்டமின் C, பையோபிளேவோனாய்ட்ஸ் தேவைப்படுகிறது என அர்த்தமாகும். வாங்க. அவற்றை குணமாக்கிற வழியை பார்க்கலாம்.

சமையல் சோடா: 

இது பேக்டீரியாவை அழிக்க உதவுவதுடன், புண்ணையும் போக்குகிறது. இது எரிச்சலை குறைக்கசெய்யவும் உதவுகிறது. மேலும் இது கிருமிகளையும், பாக்டீரியக்களையும் அழிக்கிறது 

1 டீ ஸ்பூன் சமையல் சோடாவை ½ கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும். ஆம், கழுவும் பொழுது...தண்ணீரினை உங்கள் வாயின் நாளாப்புறமும் சுழற்றி, கொண்டுசென்று அதன் பின் துப்புவது மிகவும் முக்கியம். இதேபோல் ஒரு நாளைக்கு இரணடு முறை செய்து வர உங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

துளசி இலைகள்: 

துளசி இலையை மென்றுவர...உங்கள் வாய்ப்புண் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். முதலில் துளசி இலையை நன்றாக மென்று அதன் பின் தண்ணீர் குடிக்க உங்கள் பிரச்சனை நீங்கும். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை, பல பிரச்சனைகளுக்கு தீர்வாக நமக்கு அமைகிறது. ஒரு நாளைக்கு 3லிருந்து 4 முறை சில துளசி இலைகளை மென்று அதன் பின்னர் தண்ணீர் குடித்துவர, வாய்ப்புண் பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.

தேன்: 

உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து...பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும். உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவேண்டுமென்றால்...மஞ்சளை தேனுடன் கலந்து தேய்க்க வேண்டும்

மோர்: 

மந்திர மூலப்பொருளான இந்த மோர், புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. இந்த மோரில் லாக்டிக் அமிலம் இருப்பதுடன், இயற்கையிலே சற்று அமிலமும் கலந்துள்ளது. இது புண்ணால் ஏற்படும் வலியை குறைக்க வல்லது

சீமைச்சாமந்தி: 

இந்த மலர் கிருமி நாசினி பண்புகளை கொண்ட ஒரு மலராகும். பொதுவாக வாயை கொப்புளிக்க பயன்படுத்தபடும் இந்த மலர், வாய்ப்புண்ணையும் ஆற்ற வல்லது. உங்கள் கைகள் நிறைய சீமைசாமந்தி மலர்களை எடுத்துகொள்ளுங்கள். அதனை தண்ணீரில் போட்டு...ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயை கழுவி வாருங்கள். இதன் பண்புகள் வாய்ப்புண்ணை நீக்கி வாய்பிளந்து ஆச்சரியத்துடன் உங்களை நிற்க வைக்கும்.

தேயிலை: 

மற்றுமொரு தற்காலிக தீர்வாக இந்த முறை இருக்கிறது. வளிமண்டலத்தில் ஒரு ஈரமான டீ பேக்கை வைக்க வேண்டும். டேன்னின் எனப்படும் ஒன்று, பிளாக் டீ யில் இருக்கிறது. இந்த டீ பேக்கில் இருக்கும் பவுடரை கொண்டு வலிக்கான நிவாரணத்தை நாம் பெறலாம் என்கின்றனர்

கொத்துமல்லி தழை: 

கை முழுக்க கொத்துமல்லி தழையை எடுத்துகொள்ள வேண்டும். அதனை நன்றாக நசுக்கிகொள்ள வேண்டும். அந்த ஜூஸை, வாய்ப்புண் குறைய நாம் குடித்துவர..புண் நீங்கி விரைவில் பயன் தருகிறது. அதேபோல், கொய்யா இலைகளை நன்றாக நசுக்கி, ஜூஸாக்கி வாய்ப்புண்ணுக்காக குடித்துவர, அது உங்கள் புண்ணை விரைவில் போக்கி நலம் பெற உதவுகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...