உடலில் இருக்கும் சளியை மிக எளிமையாக அகற்ற சூப்பர் டிப்ஸ்!

மழை காலம் தொடங்கிவிட்டாலே குளிரால் முகம் சிவக்கிறதோ இல்லையோ... தும்மல், சளியால் முகம் செக்க சிவந்துவிடும். சிலர் இதற்காகவே மழைக் காலம் தொடங்கிவிட்டால் சில மருந்து மாத்திரைகளை பர்ஸில் வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அதற்கு பதிலாக, ஒரே தீர்வாக, சிறந்த தீர்வாக மட்டுமின்றி.. உடலில் இருக்கும் சளியை முற்றிலும் நீக்க உதவும் கைதேர்ந்த வீட்டு வைத்தியங்கள் இவை...

மருத்துவம் #1

தேவையான பொருட்கள்:

  • சுக்கு.
  • மிளகு.
  • திப்பிலி.
  • தாளிசபத்திரி.
  • தேவதாரு.


செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு சேர்த்து நன்கு பொடி செய்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/8 லிட்டராகச் காய்ச்சி காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் சளி, காய்ச்சல் குறையும்.

மருத்துவம் #2

தேவையான பொருட்கள்:

  • கொள்ளு.


செய்முறை:

நன்கு சுத்தம் செய்த கொள்ளை நீர் விட்டு சுத்தம் செய்து வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வடிக்கட்டி அதன் நீர் எடுத்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

மருத்துவம் #3

தேவையான பொருட்கள்:

  • கடுங்காப்பி.


செய்முறை:

வெள்ளை சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் சளி நீங்கும்.

மருத்துவம் #4

தேவையான பொருள்கள்:

  • யூகலிப்டஸ் எண்ணெய்.


செய்முறை:

தூய யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் குறையும்.

மருத்துவம் #5

தேவையான பொருட்கள்:

  • மாதுளம் பழம்.


செய்முறை:

மாதுளம் பழத்தை நன்கு கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

மருத்துவம் #6

தேவையான பொருள்கள்:

  • துளசி இலை.
  • கற்பூரவல்லி இலை.


செய்முறை:

துளசி, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து வேக வைத்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி வீதம் 3 நாட்கள் பருகி வந்தால் சளி குறையும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...