உடல் சோர்வை நீக்கக்கூடிய சில ஆயுர்வேத சிகிச்சைகள் !!

தற்போது உடல் சோர்வு என்பது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை. இதற்குக் காரணம் இந்த நவீன உலகின் வாழ்க்கை முறை தான். உடற்சோர்விற்கு முதல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வேலைச் சுமை, மனஅழுத்தம், போதிய தூக்கமின்மை இவைகள் தான். ஆனால் குழந்தைகள் என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்க வேண்டாம். அவர்கள் விளையாடும் விளையாட்டே அவர்களை சிறிது நேரத்தில் சோர்வாக்கி விடுகிறது.

பழமையான அறிவியல் என்று சொன்னால் அது ஆயுர்வேத வைத்திய முறை தான். நம் உலகில் ஏராளமான ஆயுர்வேத செடிகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றை முறையே பயன்படுத்தினால் நாம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் நிச்சயம் இருக்கலாம்...

இந்தக் கட்டுரையில் சோர்வை நீக்கக்கூடிய சில சிறந்த ஆயுர்வேத மருந்துகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை படித்து தெரிந்துக் கொண்டு, உபயோகித்து ஆரோக்கியமான உடலைப் பெறுங்கள். இப்போது நாம் சோர்வை நீக்கக்கூடிய சில ஆயுர்வேத மருந்துகளைப் பற்றிப் பார்ப்போம்...

சீரகம் 

ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் பொதுவான ஒரு மசாலாப் பொருள் தான் சீரகம். இந்த சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்து வறுத்து பொடி செய்து, கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சோர்வைக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் 

மஞ்சள் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ள மட்டுமின்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை ஊக்குவிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் செய்யும். ஆகவே உடல் சோர்வைப் போக்க அன்றாட உணவில் தவறாமல் மஞ்சளை சேர்த்து வாருங்கள்.

கடுகு 

கடுகில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கத் தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, சி, கே, கரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் சோர்வில் இருந்து விடுபடவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

இஞ்சி

உடல் சோர்வு மிகுதியாக இருந்தால், ஒரு கப் இஞ்சி டீயைக் குடியுங்கள். இதனால் நிமிடத்தில் உடல் களைப்பில் இருந்து விடுபடலாம்.

பட்டை 

அதிகாலையில் ஒரு டம்ளர் சுடுநீரில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பட்டைத் தூளை சேர்த்து கலந்து குடிக்க, உடல் களைப்பில் இருந்து விடுபடலாம். அத்துடன் நல்லெண்ணெயை நெற்றியில் தடவி வந்தால், உடல் சோர்வினால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

அஸ்வகந்தா

ஏராளமான அளவில் மருத்துவ குணங்களைக் கொண்ட அஸ்வகந்தா, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைத் தடுத்து, உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.

பூண்டு 

பூண்டுகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஒரு பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறக்கூடும்.

குக்குல் (Guggul) 

இதில் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். இருப்பினும் இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவதே சிறந்தது.

நெல்லிக்காய் 

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, அட்ரினல் சுரப்பியில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவும். அதற்கு ஒரு டம்ளர வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலந்து தினமும் குடியுங்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...