பொடுகை சமாளிக்க நாட்டு வைத்தியம்!! மாயமாகிப் போகும். ட்ரை பண்ணுங்க!

பொடுகு, முடி உதிர்தல், இள நரை போன்றவை உலகப் பிரச்சனை. ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லாருக்கும் இந்த கூந்தல் பாதிப்புகள் இருக்கிறது. முடி அழகு முக்கால் அழகு என்று சொல்வார்கள். என்னதான் முகம் சுந்தரியாக இருந்தாலும் கூந்தல் எலி வாலாக இருந்தால் பிரயோஜனமே இல்லை. ஆகவே உங்களுக்கு கூந்தலில் என்ன பாதிப்பு இருந்தாலும் சரி. இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பலனைத் தரும்.




மிளகு மற்றும் பால் : 

பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்

துளசி மற்றும் கருவேப்பிலை : 

துளசி இலையை கருவேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். அவ்ற்றுடன் கற்பூரத்தை பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை மயிர்க்கால்கலில் படும்படி தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாகிவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன் : 

எலுமிச்சைச் சாற்றை தேன் மற்றும் முட்டையுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.

கடலை மாவு மற்றும் சீகைக்காய் : 

3ஸ்பூன் கடலைமாவு, 3 ஸ்பூன் சீகைக்காய் பொடி, 1 ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் சீக்கிரம் பொடுகு மரைந்துவிடும்.

இள நரை மறைய : 

ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்

முடி உதிர்தலை தடுக்க : 

முடி உதிர்தலுக்கு கருஞ்சீரக என்ணெய் அற்புத மருந்தாகும். அரை மூடி எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முடியை அலசுங்கள். முடியை நன்றாக காய விடுங்கள். பின்னர் கருஞ்சீரக எண்ணெயை தலை முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கச் செய்யவும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...