ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...

ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இஸ்லாமியர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக நோன்பை மேற்கொள்வது வழக்கம். நாள் முழுவதும் தண்ணீர் சிறிதும் குடிக்காமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் கோடையில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சி ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் இந்த கடுமையான நோன்பு அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஆரம்பித்து, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் தான் எதுவும் சாப்பிடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளிக்கு பின் சாப்பிடும் உணவை இஃப்தார் என்று அழைப்பார்கள். நீண்ட நேரத்திற்கு பின் இஃப்தார் வேளையில் சாப்பிடும் போது, உடலை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும். இங்கு அந்த பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

மேங்கோ மிண்ட் கூலர்:

 

குளிர்ந்த நீரில் மாம்பழத் துண்டுகள், ஒரு கையளவு புதினா இலைகள், சிறிது ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஜில்லென்று குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியும் அடையும்.

லெமன் மிண்ட் மோஜிடோ: 

இது மிகச்சிறந்த ஓர் இஃப்தார் பானம். அதற்கு குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளுடன், சிறிது தேன், ஒரு கையளவு புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்: 

தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து, அதோடு ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து கலந்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி அடைவதோடு, வறட்சி அடையாமலும் இருக்கும்.

சப்ஜா லெமன் ஜூஸ்: 

1 ஸ்பூன் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து நோன்பை முடிக்கும் போது குடிப்பது மிகவும் நல்லது.

வெல்ல சர்பத்: 

காலையிலேயே நீரில் சிறிது வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். மாலைக்குள் இது கரைந்துவிடும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு, சிறிது ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...