தர்பூசணியை வெட்டும் போது, இப்படி வெடிப்புகள் இருந்தா சாப்பிடாதீங்க...

கோடையில் அதிகம் கிடைக்கும் ஓர் பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், கோடைக்காலத்தில் பலரும் இதை அதிகம் வாங்கி சாப்பிடுவர். தர்பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் தர்பூசணியை ஒரு வயாகரா என்று கூட சொல்லலாம்

ஆனால் அனைத்து தர்பூசணியும் ஒன்றல்ல. என்ன புரியவில்லையா? தற்போது நிறைய பழங்கள் கெமிக்கல்கள் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. இப்படி கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த தர்பூசணியை சாப்பிட்டால், அது உடல் நலத்தை மோசமாக பாதிக்கும்


என்ன கெமிக்கல்? 

தர்பூசணியைப் பழுக்க வைக்க பார்குளோர்பெனுரான் என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு, தர்பூசணியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. இந்த கெமிக்கல் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அழிக்கும்.

பல நாடுகளில் தடை:

 

பார்குளோர்பெனுரான் என்னும் கெமிக்கல் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அனுமதிக்கப்பட்டு, ஏராளமான அளவில் தர்பூசணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தான் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். எனவே தர்பூசணியை வெட்டும் போது, அதனுள் வெடிப்புகள் இருப்பின், அப்பழத்தை சாப்பிடாதீர்கள். சரி, இப்போது தர்பூசணியின் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

இதயத்திற்கு நல்லது: 

ஆய்வுகளில் தர்பூசணி தமனிகளில் உள்ள ப்ளேக்குகளின் தேக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு வருவதைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு அதில் உள்ள சிட்ருலின் தான் காரணம். இது தான் உடலினுள் அர்ஜினைனான மாற்றமடைந்து, தமனிகளை சுத்தமாக மற்றும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

எடை குறைவு:

தர்பூசணியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, ஆனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். தர்பூசணியை எடையைக் குறைக்க நினைப்போர் அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி வருவது தடுக்கப்படும்.

கண்களுக்கு நல்லது: 

தர்பூசணியில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாறி, கண்கள் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ ரெட்டினாவில் நிறமிகளின் உற்பத்தியைத் தூண்டி, மாகுலர் திசு சிதைவதைத் தடுத்து, மாலைக் கண் நோய் வருவதையும் தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மற்றும் கண் புரையைத் தடுக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...