தினமும் காலையில் இதை செய்தால் நீண்ட நாள் இளமையோடு காட்சியளிக்கலாம் தெரியுமா?

ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் தங்கள் இளமையைப் பாதுகாக்க பல சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கெமிக்கல் கலந்த அழகு பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் தான் பாழாகும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் ஆரோக்கியம் பாழாகாமலும், அதே சமயம் சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் நீண்ட நாட்கள் இளமையோடு காட்சியளிக்கவும் உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் மாஸ்க் குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து பயன்படுத்தி, இளமையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்: 

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் நற்பதமான கேரட் ஜூஸ் - 5 டேபிள் ஸ்பூன் புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மிலி நீரை ஊற்றி, அதில் சோள மாவு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி இறக்க வேண்டும்.



பின்பு அது நன்கு குளிர்ந்த பின் அத்துடன் கேரட் ஜூஸ் மற்றும் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த மாஸ்க்கை முகத்திற்கு போடும் முன், முகத்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.


அடுத்து தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்


குறிப்பு:

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கால் நிச்சயம் இளமையை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...