வயசானாலும் கண் சூப்பரா தெரியனும்னா இந்த கீரைகளில் ஏதாவது ஒன்னை தினமும் சேர்த்துகோங்க!!

பிறவிக் கொளாறு மற்றும் மரபணு காரணமாக இயற்கையிலெயெ சிலருக்கு கண் பார்வை குறைவாக இருக்கலம். அது தவிர, ஊட்டசத்து குறைபாடு மற்றும் கண்களுக்கு அழுத்தம் தரும் வகையில் டிவி, மொபைல் என நம்மை கெடுக்கும் மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதாலும் கண் பார்வை பறிபோகும்.

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் உங்கள் கண்கலிய வலிமையாக்கும் சில முக்கிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படிங்க.


மாலைக் கண் :

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது.பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

கீரைகள் :

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளைக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவட்ரில் ஏதாவது ஒரு கீரையை தினமும் சமைத்தால் 90 களிலும் உங்கள் பார்வை கூர்மைதான்.

காய்கறிகளில் : 

வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அடர் நிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது

அமினோ அமிலங்கள் : 

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன.

இறைச்சி : 

அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றை தவறாமல் சாப்பிட்டால் அல்லது கண்பார்வை குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டால் கண் பார்வை பலப்படும் என்பது உறுதி.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...