முகப்பரு தழும்பை மறைய வைக்கனுமா? இதெல்லாம் உபயோகிச்சுப் பாருங்க!!

முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்புகள் சட்சியாக விடாமல் உங்கள் சருமத்தில் இருந்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் ஆனாலும் பருத் தழும்புகள் குழியாய் அசிங்கமா காட்சியளிக்கும். அந்த தழும்புகளை எளிதில் போக்க முடியாதுதான். ஆனால் சோம்பேறித்தனம் படாமல் தினமும் தவறாமல் செய்தால் வெகுவிரைவிலேயே தழும்புகள் மறைந்து உங்கள் முகம் புத்தம்புதிதாக காட்சியளிக்கும். அதற்கான வழிகள் இங்கே தந்திருக்கிறோம். உபயோகப்படுத்திப் பாருங்கள். பயனளித்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

வாழைப்பழத் தோல் மற்றும் யோகார்ட் :

வாழைப்பழத்தோலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது யோகார்ட் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். இவாறு செய்தால் தழும்புகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

ஜாதிக்காய் :

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்மேல் போட்டு வரவும் . தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.


சந்தனம் மற்றும் பாதாம் ;

கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன்அளவுபாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது) தயிர் - 2 - டீ ஸ்பூன்எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன் இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

க்ரீன் டீ மற்றும் மஞ்சள் பொடி :

1 ஸ்பூன் க்ரீன் டீயை சிறிது கால் நீரில் போட்டு அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் கஸ்தூரி மஞ்சளைப் போட்டு கலக்கிக் கொள்லுங்கல். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போல் போட்டு நன்றாக காய விடுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவாறு தினமும் செய்து வந்தால் முகப்பரு தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் முட்டை :

எலுமிச்சை சாறெடுத்து அதனை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து அவற்றுடன் 1 ஸ்பூன் க்டலை மாவு கலந்து பேக்காக முகத்தில் போடுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் எண்ணெய் பசை கட்டுப்படும். முகப்பரு தழும்பும் காணாமல் போகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை செய்ய வேண்டாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...