பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த மாஸ்க் தான் பெஸ்ட்!

சரும அழகை மேம்படுத்த உதவும் இயற்கைப் பொருட்களுள் ஒன்று தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை முகப்பரு, அதிகப்படியான எண்ணெய் பசை, சரும கருமை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பெரிதும் பயன்படுத்தப்படும் ஓர் பொருளாகும்.

இந்த சிட்ரஸ் பழம் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, சருமத்தை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, செல்களுக்கு புத்துயிர் அளித்து, புதிய சரும செல்களை உருவாக்கவும் உதவும். இவ்வளவு நன்மைகளை வாரி வழங்கும் எலுமிச்சையுடன் ஒருசில பொருட்களைச் சேர்த்து மாஸ்க் தயாரித்து பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்கி சரும அழகை மேம்படுத்தி, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்

சரும சுருக்கம்:

சருமத்தில் சுருக்கம் அதிகமாக இருந்து, முதுமைத் தோற்றத்தை வழங்கினால், எலுமிச்சையுடன் க்ரீன் டீ மற்றும் மஞ்சள் சேர்த்து மாஸ்க் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.


தேவையான பொருட்கள்:




க்ரீன் டீ - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி தடவி, 3 நிமிடம் கழித்து, மீண்டும் ஒருமுறை தடவி, 3 நிமிடம் ஊற வைக்கவும். இப்படி கலவை முழுவதும் தீர்ந்து போகும் வரை தடவி, இறுதியில் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.




முகப்பருக்கள்:

முகத்தில் பருக்கள் மற்றும் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், எலுமிச்சையுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து மாஸ்க் தயாரித்துப் போடுங்கள். மேலும் இந்த மாஸ்க் முகத்தில் உள்ள மேடு பள்ளங்களான சருமத் துளைகளை சுருக்கும்.

தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக் கரு - 1 எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:




ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய்ந்த பின் நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

சரும கருமை:




முகம் கருமையாக உள்ளதா? உங்கள் சருமத்தை வெள்ளையாக்க வேண்டுமா? அப்படியெனில் எலுமிச்சையுடன் தக்காளி மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.


தேவையான பொருட்கள்:




எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் - 1 டீஸ்பூன்


செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...