காலை உணவை தவிர்த்தால் இந்த நோயெல்லாம் உங்களுக்கு வரக்கூடும்!! ஜாக்கிரதை!!

காலையில் அரசனை போல் சாப்பிடு. மதியம் மந்திரியை போல் சாப்பிடு. இரவில் பிச்சைக்காரனை போல் சாப்பிடு என்ற சொல்வழக்கு நமது ஊரில் உண்டு. மிகச் சரியான வார்த்தை. காலையில் தாராளமாகவும் இரவில் சுருக்கியும் எவர் ஒருவர் சாப்பிடுகிறாரோ அவர் நீண்ட ஆயுளை பெறுவார்கள்.
ஆனால் நாம் அரக்கப்பரக்க வேலைக்கு, பள்ளிக்கு போகும் முன் கொரித்துவிட்டு போகிறோம். இதனால் பலப்பலப்பிரச்சனைகள் உண்டாகின்றன. காலை உணவை  தவிர்ப்பதால் உண்டாகும் பக்க விளைவுகளையும் அதை தவிர்ப்பது எப்படி என்பதையும்  இங்கே கூறியிருக்கிறோம். படித்து பயன்பெறுங்கள்.
ஏன் காலை உணவை தவிர்க்கக் கூடாது?
நாம் துவங்குவற்கு முன் முழு ஆற்றலோடு துவங்க வேண்டும். அதற்கு காலை உணவு மிக முக்கியமான ஒன்று. காலை உணவை நாம் தவிப்பது ஒரு பெரியத் தவறாகும்.
ஏனென்றால், இரவு நாம் தூங்கும் போது நாம் சாப்பிட்ட உணவிற்கும் காலை சாப்பிடும் உணவிற்கும் உள்ள இடைவேளை 12 மணி நேரம் ஆகும். சராசரியாக நாம் உண்ணும் உணவு செரிக்க குறைந்தது 4 மணி நேரம் தான் ஆகும்.
ஆனால், இரவு உணவிற்கு பிறகு 12 மணி நேரம் இடைவேளை இருப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைவாக இருக்கும்.
பின்விளைவுகள் :
காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன் உண்டாகும். அல்சர், அசிடிட்டி,. குடல் அழற்சி ஆகியவை முக்கியமாக உருவாவதற்கு காலை உணவை தவிர்த்தலே மிக முக்கிய காரணம்.
மன அழுத்தம் :
எனவே, காலை உணவில் ஒவ்வொருவரும் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பொதுவாக அனைவரும் காலை வேளையில் சாப்பிடாமலோ அல்லது மிகக் குறைவான உணவினையோ தான் எடுத்துக் கொள்கின்றனர்.
இது உடலுக்கு நல்லதல்ல. காலையில் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் சர்க்கரையின் அளவானது குறையக்கூடும், உடல் எடை அதிகரிக்கக் கூடும் அல்லது மன அழுத்தத்தை ஏற்படத்தக்கூடும்.
காலையில் சேர்க்கவெண்டியவை :
சராசரியாக ஒரு மனிதன் காலை வேளையில் 60% தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஓட்ஸ், அவல், ரவா உப்புமா, கோதுமையினால் செய்த உணவுகள், உருளைக் கிழங்கு, முட்டைக் கோஸ் அல்லது வெந்தயம். இது போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
காலை உணவு எப்படி இருக்கவேண்டும்?
இந்த உணவுகளுடன் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்க வேண்டும். இது கால்சியத்திற்கு மிக முக்கியம். சிலர் பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வர்.
அதுவும் நல்லது தான். ஆனால், பழங்கள் மற்றும் பாலை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. காலை உணவில் அனைத்து சத்துக்களையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம்

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...