விட்டமின் ஈ எந்த உணவுல அதிகமா இருக்குன்னு தெரியுமா? இதப் படிங்க!!

எப்பவும் புரதம் , கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளிலேயே நம் கவனம் இருக்கு பொதுவா விட்டமின் குறைபாட்டை பற்றி நாம் கண்டு கொள்வதே இல்லை. அது நம்மை பாதிக்காதவரை. உண்மையில் செல்களை புதுப்பிக்கவும், செல்களை சிதைக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் குறையவும் விட்டமின் தேவை. அடிப்படையில் செல் பலமாக இருந்தால் நம்மை நோய் தாக்குவது கஷ்டம். ஒவ்வொரு விட்டமினுக்கும் ஒவ்வொரு வேலை நமது உடலுக்காக செய்கிறது.

அதில் ஒன்றுதான் விட்டமின் ஈ. விட்டமின் ஈ செல்களை பலப் பெறச் செய்கிறது. புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. முதுமையை தள்ளிப் போடுகிரது. சுருக்கமில்லா சருமம் தருகிரது. கண்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. அதன் நன்மைகளை தெரிந்து வைத்துள்ளோம். அதி எந்த உணவுகளில் அதிகம் இருக்கிறது என தெரியுமா? இதப் படிங்க

சூரிய காந்தி விதைகள் :
சூரிய காந்தி விதையில் மிக அதிகமாக விட்டமின் ஈ சத்து உள்ளது. ஆனால் கடைகளில் சூரிய காந்தி எண்ணெய் என்ற பெயரில் அதன் வாசனை மட்டும் சேர்த்து விற்கிறார்கள். இதனை வாங்குவதால் ஒரு உபயோகமும் இல்லை. தரத்தை பார்த்து வாங்குவதில் கவனம் வேண்டும்.

பசலைக் கீரை :
பசலைக் கீரையிலும் விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. ஒரு கப் பசலைக் கீரையில் உங்களுக்கு தேவையான 20% விட்டமின் ஈ உள்ளது.

காலே :
கலே கீரையிலும் பசலையில் இர்ப்பது போலவே இருக்கிரது. ஒரு கப் காலேயை நீங்கள் எடுத்துக் கொண்டால் 6% விட்டமின் ஈ சத்து உங்களுக்கு கிடைக்கும்.

டர்னிப் :
டர்னிப் லேசான கசப்புத்தன்மையுடன் இருந்தாலும் விட்டமின் சத்துக்களின் கோபுரமாக திகழ்கிறது. விட்டமின் ஏ, கே, சி மற்றும் பல அந்த்யாவசிய சத்துக்கள் பெற்றது டர்னிப்.

வெஜிடேபிள் எண்ணெய் :
1 ஸ்பூன் வெஜிடேபிள் எண்ணெயில் 4.5- 5 மி.கி. அகவு விட்டமின் ஈ உள்ளது. ஆகவே மறுமுறை சமைக்காமல் புதிய எண்ணெயை உபயோகப்படுத்தும் போது விட்டமின் ஈ நமக்கு முழுதாக கிடைக்கும்.

வேர்க்கடலை :
உங்களுக்கு வேர்க்கடலை பிடிக்குமென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலு. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருக்கிறது. வெறும் கால் கப் வேர்கக்டலையில் 20% விட்டமின் ஈ உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...