இன்றைய மருத்துவ சிந்தனை சிறு கீரை

சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுகீரையுடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

சிறுகீரை, பார்லி ஆகியவற்றோடு சீரகம் (சிறிதளவு) மற்றும் மஞ்சள்தூள் (4சிட்டிகை) சேர்த்துக் கொதிக்கவைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி, சிரங்கு, படை போன்ற தோல்நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையோடு மிளகுத் தூள், உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் குணமாகும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...