இந்த உணவுகளில் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக சர்க்கரை உள்ளது என்று தெரியுமா?


நம் உடல் ஆரோக்கியம் பாழாவதற்கு அன்றாட உணவில் சேர்க்கும் சர்க்கரையும் முக்கிய காரணமாகும். நம்மில் பலரும் நமக்கு அறியாமலேயே தினமும் அதிகளவு சர்க்கரையை சாப்பிடுகிறோம். ஒருவர் தினந்தோறும் ஏராளமான அளவில் சர்க்கரையை சேர்த்து வந்தால், அதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

இக்கட்டுரையில் நாம் நினைப்பதை விட அதிகளவு சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து வாருங்கள்.




க்ரனோலா மற்றும் புரோட்டீன் பார்கள் இவைகள்: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள் தான். இருப்பினும் இவைகள் ஒருவகையான மிட்டாய் என்பதால், இவற்றில் சர்க்கரை அதிகளவு இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ப்ளேவர்டு தயிர்: ப்ளேவர்கள் சேர்க்கப்பட்டு விற்கப்படும் தயிர்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். அதிலும் 25 கிராம் சர்க்கரை இருக்கும். இது முற்றிலும் ஆரோக்கியமற்றது. ஆகவே இம்மாதிரியான தயிர்களை சாப்பிடாதீர்கள்.

பழச்சாறுகள்: டப்பாக்கள் மற்றும் பாட்டிலில் விற்கப்படும் பழச்சாறுகளில் சர்க்கரை மட்டுமின்றி, சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிருப்பதால், இருப்பதிலேயே மோசமான உணவுப் பொருட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நட்ஸ் பட்டர்: நட்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் வெண்ணெய்களில் சர்க்கரையும் சிறிது கலக்கப்பட்டுள்ளது. எனவே இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.




டெலி மீட்: இந்த இறைச்சிகளில் தேன், டெக்ஸ்ட்ரோஸ், கார்ன் சிரப் போன்ற இனிப்புக்கள் சேர்க்கப்படுகின்றன.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...