இரத்தத்தை சுத்திகரித்து சொரியாசிஸை தடுக்க உதவும் 7 எளிய இயற்கை உணவுகள்


சருமப் பிரச்சனை என்றாலே அது மனதிற்குள் ஒரு சங்கடத்தை உண்டு பண்ணும். அது சிறிய தோல் பிரச்சனையில் இருந்து சொரியாசிஸ் வரை எதுவாக இருந்தாலும் சரி சங்கடம் ஒன்று தான் அல்லவா. சொரியாசிஸ் என்பது பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு வரக்கூடும். அப்படி வந்தது வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு.

சொரியாசிஸ் என்பது நம் தோல் மேல் சிவப்பு தடுப்புகள், அரிப்பு, வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தி ஒரு வித சீரற்ற தோல் பரப்பை உண்டு செய்யும்.

அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும் இரத்தத்தில் உள்ள கிருமிகள் தான் காரணம். எனவே, இரத்தத்தை சுத்தம் செய்வது என்பதே சொரியாசிஸ் முதல் அனைத்து தோல் பிரச்சனைகளையும் சரி செய்ய ஏற்றதாகும். இயற்கை மருத்துவ முறையிலேயே வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இரத்தத்தை எளிமையாக சுத்தம் செய்துவிடலாம்.

வாருங்கள். இப்போது இரத்தத்தை சுத்தம் செய்து சொரியாசிஸ் வராமல் தடுக்க உதவும் இயற்கை வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்...

எலுமிச்சை:



கல்லீரலில் உற்பத்தியாகும் குளுதாதயோன் என்னும் புரதத்தை எலுமிச்சை தடுக்கிறது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்குகிறது. இது என்சைம்களை ஊக்குவித்து டாக்ஸின்களை கரையச் செய்கிறது. பின்னர், உடலில் இருந்து அவற்றை சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.

நெல்லிக்காய்:



நெல்லிக்காயில் இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்யும் பண்பு உள்ளது. இதனால் சொரியாசிஸ் வருவதை தடுக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மஞ்சள் தூள்:







நமது உடல் ஆரோக்கியத்தில் மஞ்சள் தூள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் தூளில் சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட் ஆன குர்குமின் உள்ளது. இது உடலுக்கு நிறைய பலன்களைத் தருகின்றது. மேலும், கல்லீரலின் ஆற்றலுக்கும், நல்ல செரிமான ஆற்றலுக்கும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்குகிறது.

கேரட்:



சொரியாசிஸ் மற்றும் பிற தோல் வியாதிகளுக்கும் கேரட் மிகச் சிறந்த இயற்கை மருந்தாகும். ஏனென்றால், கேரடில் குளுதாதயோன், பல்வேறு வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் கே உடன் பொட்டாசியமும் உள்ளது. இவை அனைத்தும் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை பிரித்து வெளியேற்றி விடும்.

ப்ராக்கோலி:



ப்ராக்கோலியில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்பு இரத்தத்தை சுத்தம் செய்யவும் மற்றும் சொரியாசிஸ் வராமலும் தடுக்கிறது. எனவே, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்ற உதவுகிறது. அதனால், எந்த ஒரு தோல் வியாதி மற்றும் சொரியாசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது.

பாவக்காய்:



பாவக்காயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பொதுவாக இது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல் படுகிறது. இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை இது நீக்குவதால் சொரியாசிஸ் போன்ற பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சொரியாசிஸ்க்கு ஏற்ற வீட்டு வைத்தியம் இது.

பீட்ரூட்:



பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை தீங்கு விளைவிக்கும் கிருமிகளிடம் இருந்து காக்கிறது. இது கல்லீரலை தூண்டச் செய்து உடலில் நச்சு நீக்கத்தை நடைபெறச் செய்கிறது. அதனால் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்சனை ஏற்படாமல் தடுத்து தோலை பாதுகாக்கிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்திய பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து உட்கொண்டு பலன் பெறுங்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...