உடல் பிரச்சனைகளை தீர்க்கும் சுண்ணாம்பின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?


சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. சுண்ணாம்பை வெள்ளைப் பூச்சுக்களுக்கும், வெற்றிலை போடவும்தான் அதிக பட்சம் நாம் பயன்படுத்துகிறோம்.

வீட்டின் சுவருக்கு சுண்ணாம்பை பூச்சுவதால் வீட்டில் பூச்சிகள் நெருங்காது. புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாக்கப்படுறது. அதுபோல் நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை வெற்றில் போடுவதால் நமது எலும்புகலுக்கு கிடைக்கிறது. அப்படியான சுண்ணாம்பை எதற்கெல்லாம் நாம் உபயோகப்படுத்த முடியும் என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்!!

விஷப் பூச்சிகளின் கடிகளுக்கு:



விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டைவலிக்கு:







இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலை:







மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகளுக்கு:







கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

தலைவலிக்கு:







தலையில் நீர்கோர்த்துக் கொண்டு தலை பாரமாகி விடுகிறதா? எளிய வழி இதுதான். இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் பத்து போட்டால். நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர் கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...