ஆயுர்வேத சிகிச்சையை ஏன் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கான 8 காரணங்கள்!!

ஆயுர்வேத மருத்துவம் ஒரு விரிவான அமைப்பைப் பற்றியது. அவை உடற்கூறியல்,உடலியல்,மருந்தியல்,நோயியல் மற்றும் அறுவை சிகிச்சை. சுவையற்ற பொடிகள் மற்றும் கசப்பான திரவங்கள் இவை அதிக அறிவியல் தன்மையும்,மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

மருந்துகள் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் மிகுந்த கவனமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆயுர்வேதத்திற்கு பல சிக்கலான நோய்களை குணமாக்கக்கூடிய சக்தி உள்ளது.ஆயுர்வேதம் என்பது ஒரு மருத்துவ அறிவு மட்டுமின்றி ஒரு மனிதனின் சமூகம்,நெறிமுறை,அறிவார்ந்த மற்றும் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆயுர்வேதம் முற்றிலும் இயற்கைப் பொருட்களை அடிப்டையாகக் கொண்டது. ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் இயற்கை பொருள்களான மூலிகைகள் மற்றும் கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.இது மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி சிறந்த மருத்துவ குணம் கொண்டது.

ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்த சிறப்பு பண்புகள் உண்டு மற்றும் பல்வேறு விதமான நோய்களையும் தனிப்பட்ட முறையில் தீர்க்கவல்லது.மூலிகைகள் தனியாகவோ (அ) பல்வேறு மூலிகைகளுடன் இணைந்தோ உபயோகிக்க முடியும்.

ஆயுர்வேதம் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது.

 à®†à®¯à¯à®°à¯à®µà¯‡à®¤ மருத்துவத்தின் முக்கிய நோக்கம் நோய்களின் மூல காரணத்தைக் கண்டுபிடித்து முழுவதுமாக குணமாக்குவதே ஆகும்.இது குறிப்பாக தோல் பிரச்சனைகள்,செரிமான பிரச்சனைகள்,உளவியல் பிரச்சனைகள்,பாலியல் பிரச்சனைகள்,பெண்களின் சில பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வைத் தருகிறது.

அதுமட்டுமின்றி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட நாள் வாழ்வையும் தருகிறது.ஆயுர்வேத மருத்துவம் உடலிற்கு பலத்தையும் வலிமையையும் தந்து உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வையும் அளிக்கிறது.

ஆயுர்வேதம் உடலில் உள்ள நச்சு தன்மையைப் போக்கும்.

ஆயுர்வேத மருத்துவம் உடலை வெளியே போலவே உள்ளேயும் அனைத்து உறுப்புகளையும் சுத்தம் செய்கிறது.இது உடலில் உள்ள திசுக்களில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.நச்சுக்களை நீக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை முறை பஞ்சகர்மா சிகிச்சை என அழைக்கப்படுகிறது.

இந்த முறை மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.அது மட்டுமின்றி இது உடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மனம் மற்றும் ஆன்மாவிற்கு தளர்வினைத் தருகிறது.

ஆயுர்வேத மருத்துவம் செரிமானத்தை அதிகரிக்கிறது.

பெரும்பான்மையான நோய்களின் காரணமாக செரிமானம் குறைகிறது.எனவே செரிமானத்தை சீராக்குவதன் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும்.முறையான செரிமானம் உணவு பொருள்கள்,ஊட்டச்சத்து மற்றும் மருந்துகளை பொறுத்தது.கிட்டத்தட்ட அனைத்து ஆயுர்வேத சிகிச்சையில் உள்ள மருந்துகளும் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.

ஆயுர்வேத மருத்துவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நோய்களுக்கு எதிராக போராடக் கூடிய வலிமையைத் தருகிறது.ஆயுர்வேதம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை,ஆரோக்கியமான உணவு முறை, மற்றும் ஆரோக்கியமான சிகிச்சை முறையை உருவாக்கி உடலை நோய்க்கு எதிரான வலிமையை அடையச் செய்கிறது.

இந்த வகை மருத்துவம் உடலின் பாதுகாப்பு உத்திகளை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் நோய் வருவதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது

ஆயுர்வேதம் ஆயுளை அதிகரிக்க செய்கிறது.

ஆயுர்வேதம் உடலில் நோய்க்கு மட்டுமின்றி மொத்த உடலையும் பராமரிக்க உதவுகிறது.இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உடலின் அனைத்து அடிப்படை கூறுகளை சமநிலைப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளை அதிகரிக்கிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...