உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை நொடியில் அறிய இங்க அழுத்துங்க...

ஒருவரது இதயத் துடிப்பைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை எளிதில் கணக்கிடலாம். ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும். இதற்கு குறைவான அளவில் ஒருவருக்கு இதயத் துடிப்பு இருந்தால், சற்று உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக இம்மாதிரியான நிலை விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும்.

இதயத் துடிப்பு, இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறிய உதவுவதோடு, புதிய ஆய்வு ஒன்றில் இதயத் துடிப்பு உடல்நல பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமாக இதயத் துடிப்பிற்கும், சர்க்கரை நோய்க்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

ஆய்வு:

புதிய ஆய்வில், வேகமான இதயத் துடிப்பைக் கொண்டவர்களுக்கு, சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோர் எண்ணிக்கை:

ஒரு ஆய்வில் 73,000-த்திற்கும் மேற்பட்டோரைக் கொண்டும், அதே சமயம் அதற்கு முந்தையதில் 98,000-த்திற்கும் அதிகமானோரைக் கொண்டும் ஆய்வு செய்யப்பட்டது

ஆய்வு முடிவு:

அந்த ஆய்வுகளின் முடிவில், இதயத் துடிப்பு வேகமாக இருப்போருக்கு 58% சர்க்கரை நோய் அபாயம் இருப்பதும், இதயத் துடிப்பு பிரச்சனையால் தான் சர்க்கரை நோய் வருகிறதா என்றும் முழுமையாக தெரியவில்லை

கவனம்:

பொதுவாக ஏதேனும் ஒரு செயலை செய்யும் போது இதயத் துடிப்பு சாதாரணமாக 100 ஆக இருக்கும். ஆனால் ஓய்வு நிலையில் இருக்கும் போது, இதயத்துடிப்பு 85-க்கும் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஓய்வு நிலையில் இதயத்துடிப்பை அறிவது எப்படி?

ஒருவரது இதயத் துடிப்பை இரத்த அழுத்தமானியைக் கொண்டு அறியலாம். ஒருவேளை முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையின் மூலம் அறியலாம்.

மணிக்கட்டு அல்லது கழுத்து:

மணிக்கட்டு அல்லது கழுத்துப் பகுதியில் பெருவிரல் அல்லது ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு அழுத்தம் கொடுத்து, 15 நொடிகளுக்கு எவ்வளவு முறை துடிக்கிறது என்று எண்ணி, அதை நான்கால் பெருக்க வேண்டும். உடலின் சரியான இதயத் துடிப்பைக் கணக்கிட சிறந்த நேரம் ஓய்வு எடுக்கும் போது தான்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...