செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • மோர் - 1 கப்

செய்முறை:

  • வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.
  • புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.
  • ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.
  • இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள்.
  • கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.
  • வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும். 

Newsletter

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் 'மிராக்கில்' திட்டம் துவக்கம்!

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை ஸ்மார...

கொரோனா எதிரொலி - கோவையில் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்க...

கோவையில் கொரோனா தொற்றுக்கு 75வயது மூதாட்டி பலி - 30 நாட்களில் 4 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்!

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கடந்த 2 வாரங்களாக கோவை அரசு மருத்துவமனைய...

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரசு(60). இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற...

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை...