செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • மோர் - 1 கப்

செய்முறை:

  • வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.
  • புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.
  • ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.
  • இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள்.
  • கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.
  • வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும். 

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...