உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

தற்போதைய காலத்தில் காலை உணவை பெரும்பாலானோர் தவிர்ப்பதால், பலருக்கும் அல்சர் ஏற்படுகிறது. அல்சர் ஒருவருக்கு வந்துவிட்டால், அதனால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். மேலும் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் மட்டும் 9 மில்லியனுக்கும் அதிகமானோர் அல்சரால் அவஸ்தைப்படுவதாக தெரிய வந்துள்ளது.

அல்சர் வந்த பின், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சில உணவுகளால் அல்சர் வலி மிகவும் கடுமையாக இருக்கும். இங்கு அல்சர் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்தால், அல்சர் மோசமாவதைத் தடுக்கலாம்.

காபி அல்சர் இருப்பவர்கள், காப்ஃபைன் நிறைந்த காபியை அதிகம் குடித்தால், அதில் உள்ள அமிலம் நிலைமை மோசமாக்கும். எனவே அல்சர் இருந்தால், காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

காரமான உணவுகள் காரமான உணவுகள் அல்சர் பிரச்சனை மோசமாக்கும். குறிப்பாக அது இரைப்பையில் எரிச்சலை உண்டாக்கி, மிகுந்த அவஸ்தைக்குள்ளாக்கும். ஆகவே அல்சர் குணமாக வேண்டுமானால், கார உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

வெள்ளை பிரட் சுத்திகரிக்கப்பட்ட மாவால் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற பிரட்டை அல்சர் இருக்கும் போது சாப்பிட்டால், அது நிலைமையை மோசமாக்கும்.

மாட்டிறைச்சி மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இதனை அல்சர் இருக்கும் போது சாப்பிட்டால், அல்சர் பிரச்சனை மேலும் மோசமாகும்

ஆல்கஹால் அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹாலைக் குடித்தால், அது செரிமான மண்டலத்தை பாதிக்கும். எனவே அல்சர் இருந்தால், ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள் பால் பொருட்கள் வயிற்றில் அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்து, நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஆகவே அல்சர் குணமாக நினைத்தால், பால் பொருட்களை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...