அடிக்கடி வரும் தலைவலியை நொடியில் போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள்!

தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால் பலரும் தலைவலியால் அடிக்கடி அவஸ்தைப்படுகின்றனர். இந்த தலைவலியில் இருந்து விடுபட நிறைய பேர் வலிநிவாரணி மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தலைவலிக்கு இப்படி அடிக்கடி மாத்திரைகளை எடுத்தால், அது நாளடைவில் உடலினுள் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடுவதைத் தவிர்த்து, இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி நீங்குவதோடு, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். சரி, இப்போது தலைவலிக்கான சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம்

கொத்தமல்லி: கொத்தமல்லி சிறிதை அரைத்து நீரில் கலந்து, தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு: கிராம்பை பேஸ்ட் செய்து சூடேற்றி, அதனை நெற்றியில் தடவினால், தலைவலி உடனே குணமாகும்.

சீரகம்: 35 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை தலையில் தடவி ஊற வைத்து அலச, தலைவலி வருவதைத் தடுக்கலாம்.

குங்குமப்பூ: குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ தலைவலி விரைவில் நீங்கும்.

வெற்றிலை: வெற்றிலையை லேசாக சூடேற்றி, நெற்றியில் வைத்தால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பட்டை: சிறிது பட்டையை பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வலியுள்ள தலைப்பகுதியில் தடவினால், தலைவலி உடனே போய்விடும்.

இஞ்சி: இஞ்சியும் தலைவலியைப் போக்கும். அதற்கு சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் கலந்து குடிக்க, நாள்பட்ட தலைவலியைத் தடுக்கலாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...