இந்த 6 உணவுகளும் உங்கள் தலையில் சொட்டை விழுவதை தடுக்கும்!


தலையில் சொட்டை விழுவதற்கு மரபு மட்டும் காரணமாகாது. நம்முடைய வாழ்க்கைமுறையும் சேர்ந்து விளைவை உண்டாக்கும்.

இறுக்கி படிய தலைவாருவதால் கூந்தல் கற்றைகள் பாதிக்கப்பட்டு வேரோடு முடி உதிரும். கூந்தல் பலமோடு இருக்க நல்ல புரத உணவுகள் தேடி சாப்பிடுதல் முக்கியம்.

நல்ல உணவுகள் எவ்வாறு உடல் ஆரோக்கியத்தை தருகிறதோ அதுபோல் கூந்தல் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும். முடி உதிர்தல், சொட்டை ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் உணவுகளுக்கு உள்ளன. அவ்வாறானெ என்ன உணவுகள் நீங்கள் சாப்பிட வேண்டுமென பார்க்கலாம்.

  1. சால்மன் மீன்: சால்மன் மீன் திடமான முடிக்கற்றைகள் உருவாக முக்கிய காரணமாகும். அதிலுள்ள அதிக புரதச் சத்து கூந்தலுக்கு பலம் தரும். முடிஉதிர்தல் சொட்டை ஆகியவை உருவாகாது.
  2. தேன்: தேன் கூந்தலின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. பலவீனமான முடியை பலப்டுத்தி திடமான முடிக் கற்றையை தருகிறது. இதனை ஒரு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டது.
  3. நட்ஸ்: தொடர்ந்து நட்ஸ் சாப்பிட்டு வந்தால் மரபியல் ரீதியாக வரும் சொட்டை தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே தினமும் கை நிறைய நட்ஸ் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
  4. பசலைக் கீரை: ஒரு ஆய்வு முடி உதிர்தல் மற்றும் சொட்டைக்கு மிகக் குறைந்த இரும்புசத்து மற்றும் விட்டமின் டி2 ஆகியவைகள் காரணம் என்று சொல்கிறது. இவ்விரண்டும் பசலைக் கீரையில் அதிகம் உள்ளன.
  5. ஒயிஸ்டர்: ஜிங்க் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையாகும். ஜிங்க் பற்றாக்குறையாலும் சொட்டை உருவாக காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜிங்க் மிக அதிக அளவில் ஒயிஸ்டர் என்ற கடல் வகை உணவுகளில் இருக்கிறது.
  6. எண்ணெய்: பூசணி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவைகள் கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்தை தருவதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.


Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...