வாயை திறந்து கொண்டு தூங்குவதால் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும் என தெரியுமா?

உறங்கும் நிலையில் இருந்து, குறட்டை விடுவது, கால் தூக்கி போடுவது என தூக்கத்தில் நம்மை அறிந்தும், அறியாமலும் பல விஷயங்கள் செய்வோம். இதில் ஒன்று தான் வாயை திறந்தபடி உறங்குவது. பெரும்பாலும் குறட்டை விடுபவர்களின் வாயை திறந்தபடி தான் இருக்கும்.

இரவு முழுக்க வாயை திறந்தபடி ஒரு நபர் உறங்குவதால் அவரது உடலில் என்னென்ன மாற்றங்கள், ஆரோக்கிய அபாயங்கள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்...

வாய் துர்நாற்றம்: வாயை திறந்த படி நீண்ட நேரம் தூங்குவதால் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும். வாயில் பாக்டீரியாக்கள் தாக்கம் அதிகரிக்கும்.

எச்சில்: நமது வாயை பாதுகாக்கும் சுரப்பி எச்சில் ஆகும். ஒருவர் வாயை திறந்தபடி உறங்குவதால் எச்சில் வறட்சி அடைந்து போகிறது. இது பற்களின் ஆரோக்கியத்திலும் வெகுவாக பாதிப்பை உண்டாக்குகிறது.

அமில உற்பத்தி: வாயை திறந்து தூங்கும் போது வாயில் அமில தன்மை அதிகரித்து பல் சொத்தை, பல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வாய் திறந்து தூங்கும் போது, பாக்டீரியாக்களால் உருவாகும் அமிலம் தான் பற்களின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஆஸ்துமா/தூக்கமின்மை: ஆஸ்துமா மற்றும் தூக்கமின்மை கோளாறு உள்ளவர்களுக்கு இதன் காரணமாக வாயில் சொத்தை பற்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக இவர்களுக்கு பற்களின் பின்புறம் சொத்தை பற்கள் ஏற்படலாம்.

இடது புறமாக தூங்குங்கள்: நேராக படுத்து உறங்குவதை தவிர்த்து, இடது புறமாக படுத்து உறங்குவதால் வாய் திறந்து தூங்கும் பழக்கம் குறையும். இதனால் பற்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...