நோய்களை குணமாக்கும் மல்லிகைப் பூவின் மகத்துவம் தெரியுமா?

மல்லிகைப் பூவின் வாசனையில் மயங்காதவர்கள் யாருமில்லை. அதன் வாசம் மனதை அமைதிப்படுத்தும். இந்த பூவின் வாசனையைப் போலவே அதன் மருத்துவ குணங்களும் ஆச்சரியம்.

மல்லிகை பிலிபைன்ஸ் நாட்டின் தேசிய மலர். இந்தியா, தாய்லாந்துஇலங்கை என பல நாடுகளிலும் காண்ப்படும். இந்த மல்லிகையின் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

வயிற்றுப் புழுக்கள் வெளியேற: சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்கு மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடித்து வந்தால் போதும். குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

சிறு நீரக கற்கள் கரைய: மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

மாத விலக்கு சமயத்தில்: பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

நோய் எதிர்ப்பு சக்தி பெற: மல்லிகைப் பூ ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவம் சொல்கிறது.

தாய்ப்பால் நிறுத்த: தாய்ப்பால் நிறுத்தவும், அதனால் உண்டாகும் வலியையும் வீக்கத்தினையும் குறைக்க, மல்லிக்கைப்பூ செண்டை மார்பில் சுற்றி இரவு முழுவதும் வைத்தால், தாய்ப்பால் சுரப்பது நின்று போகும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...