கோவையில் கொரோனா தொற்றுக்கு 75வயது மூதாட்டி பலி - 30 நாட்களில் 4 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்!

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கடந்த 2 வாரங்களாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.


கோவை: தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. கடந்த டிசம்பர் முதல் நாடு முழுவதும் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்துவருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் 64 பேர் புதிதாத தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் இறப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில், தற்போது, கோவையில் மட்டும் இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த இறப்புக்கு கொரோனா மட்டும் காரணமல்ல என்றும், இணை நோய்களின் பாதிப்பும் முக்கியக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, 3 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மூதாட்டி, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...