துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் தனிமை படுத்தப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கோவைக்கு வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவக் குழு அமைத்து சுகாதாரத் துறையினர் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அரியலூரைச் சேர்ந்த 34 வயது இளைஞருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறைக்கு, தொற்று பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தனர். அன்று முதல் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவரது நாசி சவ்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய்த் தொற்றின் மாறுபாட்டை கண்டறிய பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறியதாவது, வெளி மாநிலங்களில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ரேண்டம் பரிசோதனை செய்யப்படுகிறது.

துபாயில் இருந்து வந்த அரியலூரைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சளி பரிசோதனைகள் சேகரிக்கப்பட்டு, மேல் சரிபார்ப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...