கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 56 மற்றும் 60 வயது மூதாட்டிகள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுவரை உயிர்பலி நிகழாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரானா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 2 பெண்கள் இறந்த சம்பவம் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...